×

சென்னை மாநகர பேருந்து பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய போக்குவரத்துக் கழகம் அறிவுறுத்தல்

சென்னை: மாநகர் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் பயணம் மேற்கொள்ளும் பள்ளி மாணவர்கள் மற்றும் பயணிகளின் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில், பேருந்துகளை பாதுகாப்பாக இயக்கிட ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு நிலையான இயக்க முறைமை வாயிலாக அறிவுரை வழங்கப்பட்டுள்ளது என்று மா.போ.கழக மேலாண் இயக்குநர் டாக்டர்.ஆல்பி ஜான் வர்கிஸ் தகவல் தெரிவித்துள்ளார்.

மாநகர் போக்குவரத்துக் கழக பேருந்துகளில், தவிர்க்க கூடிய விபத்துகளை கண்டறிந்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் படியில் தொங்கி கொண்டு பயணம் செய்து விபத்து ஏற்படுவதை தவிர்த்திட கதவுகள் பொருத்தப்படாத பேருந்துகளில் முதற்கட்டமாக 200 பேருந்துகளுக்கு முன் பின் படிக்கட்டுகளில் தானியங்கி கதவுகள் பொருத்துவதற்கு ரூ.67 இலட்சம் மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மீதமுள்ள கதவுகள் இல்லாத பேருந்துகளுக்கு படிப்படியாக தானியங்கி கதவுகள் பொருத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும், மாணவர்கள் படிகளின் அருகே உள்ள ஜன்னல் கம்பியை பிடித்து தொங்கி கொண்டு பயணம் செய்வதை தவிர்க்க. முன் மற்றும் பின் பக்கங்களில் உள்ள படிகட்டுகளின் அருகே உள்ள ஜன்னல்களுக்கு கண்ணாடி நிரந்தரமாக பொறுத்தவும். உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும், கதவுகள் பொருத்தப்படாத பேருந்துகளில் பணிபுரியும் ஓட்டுநர் மற்றம் நடத்துநர்களுக்கு நிலையான இயக்க முறைமை -SOP வாயிலாக கீழ்கண்ட அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

* பேருந்து நிறுத்தங்களிலிருந்து பேருந்தை நகர்த்தும் முன்னர். ஓட்டுனர் பின்பார்வை கண்ணாடி மூலம் பயணிகள் யாராவது ஓடி வந்து ஏற முயற்சிக்கின்றார்களா என கவனித்தும் மற்றும் நடத்துனரும் படிக்கட்டில் ஏற முயல்பவர்களை கண்காணித்தும் விசில் அடித்து நிறுத்தி ஏற்றி பேருந்தை இயக்க வேண்டும்.

* பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் ஆபத்தான முறையில் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்தால் நடத்துநர் அவர்களுக்கு தக்க அறிவுரை மற்றும் எச்சரிக்கை செய்து பேருந்தின் உள்ளே வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* தொடர்ந்து ஆபத்தான முறையில் மாணவர்கள் படிக்கட்டில் பயணம் செய்தால் பேருந்தை சாலை ஓரம் நிறுத்தி மாணவர்கள் பேருந்தின் உள்ளே வந்த பிறகு பேருந்தை இயக்க வேண்டும்.

* மீண்டும் தொடர்ந்து ஆபத்தான முறையில் படிக்கட்டில் பயணம் செய்பவர் மீது அருகில் உள்ள போக்குவரத்து காவலர், காவல் நிலையத்தில் புகார் அளித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

*பேருந்து சாலை சந்திப்பு மற்றும் கூட்ட நெரிசல் பகுதிகளில் மெதுவாக செல்லும் போது இறங்க முயற்சிக்கும் பயணிகளை நடத்துநர் எச்சரிக்கை செய்ய வேண்டும்.

* பேருந்து நிறுத்தம் வருவதை நடத்துநர் குரல் மூலம் முன் கூட்டியே தெரிவித்து பயணிகளை இறங்க தயார்படுத்த வேண்டும்.

 

 

 

 

The post சென்னை மாநகர பேருந்து பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய போக்குவரத்துக் கழகம் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Transport Association ,Chennai ,Municipal Transport Corporation ,Transport Corporation ,Municipal Bus ,Dinakaran ,
× RELATED நடுரோட்டில் 200, 100 நோட்டை சிதறவிட்டு...