×

பிப்.8-ல் நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்பிக்கள் கருப்புச் சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடைபெறும்: டி.ஆர்.பாலு அறிவிப்பு

சென்னை: தமிழ்நாட்டின் வளர்ச்சித் திட்டங்களுக்கு உரிய நிதியை ஒதுக்காத ஒன்றிய அரசின் ஓரவஞ்சணையை கண்டித்து போராட்டம் அறிவித்துள்ளனர். சென்னை மெட்ரோ ரயில் விரிவாக்கத்துக்கு ஒன்றிய அரசு இன்னும் நிதி வழங்கவில்லை என முதலமைச்சர் குற்றச்சாட்டு வைத்துள்ளார். பிப்.8-ல் நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்பிக்கள் கருப்புச் சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் டி.ஆர்.பாலு அறிவித்துள்ளார். நாடாளுமன்ற வளாகத்தில் காந்தி சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என நாடாளுமன்ற திமுக குழு தலைவர் டி.ஆர்.பாலு அறிவித்துள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி நாடாளுமன்ற வளாகத்தில் கருப்புச்சட்டை ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளனர். தவறிழைக்கும் ஆளுநர்களை குடியரசுத் தலைவர் தண்டிக்க வேண்டும் என திமுக வலியுறுத்தியுள்ளது.

ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ள இடைக்கால பட்ஜெட் ஏமாற்றமளிப்பதாகவும், இதில் செயல்கள் குறைவாகவும், லட்சியங்கள் மிகப் பெரிதாகவும் உள்ளது. தமிழ்நாட்டை புரட்டிப்போட்ட புயல் வெள்ளத்துக்கு ரூ.37 ஆயிரம் கோடி தரவேண்டும் என்ற கோரிக்கை பற்றி பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் இல்லை.

புள்ளிவிவரங்கள் என்று வரும்போது மிகச் சில புள்ளிவிவரங்களையே அவர் கொடுத்திருக்கிறார். பொருளாதாரத்தின் குறிப்பிட்ட சில பிரச்சினைகளுக்குத் தீர்வு காண போதிய தெளிவோ, விருப்பமோ இல்லாமல் முற்றிலும் பொதுமையில் பேசப்படும் வகையில் நிதி அமைச்சரின் உரை இருந்தது. இது மிகவும் ஏமாற்றமளிப்பதாக உள்ளது

நாட்டின் எதிர்காலத்திற்காக சிறிய அளவில்கூட வாக்குறுதிகள் அளிக்கப்படவில்லை. அவர்களைப் பொறுத்தவரை, முழு பட்ஜெட்டுக்காக காத்திருக்கிறார்கள். ஆனால், முழு பட்ஜெட்டை நாங்கள் தாக்கல் செய்வோம். இண்டியா கூட்டணி வெற்றி பெற்று, மிகச் சிறந்த பட்ஜெட்டை நாங்கள் வழங்குவோம். சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் நாட்டுக்கு மிக முக்கியமானவை. ஆனால், இந்த பட்ஜெட்டில் அதற்கு என்ன முக்கியத்துவம் இருந்தது? இதேபோல், பொதுத் துறை நிறுவனங்களுக்கான நிதியும் குறைக்கப்பட்டுள்ளது” என விமர்சித்துள்ளார்.

இந்நிலையில் இன்று தமிழ்நாட்டிற்கு எந்த நிதியும் வழங்காத ஒன்றிய அரசை கண்டித்து பிப்8ல் -ல் நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்பிக்கள் கருப்புச் சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக டி.ஆர்.பாலு அறிவித்துள்ளார்.

The post பிப்.8-ல் நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்பிக்கள் கருப்புச் சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடைபெறும்: டி.ஆர்.பாலு அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Dimuka MBIKs ,D. R. Baloo ,Chennai ,EU government ,Tamil Nadu ,Chief Minister ,Union Government ,Chennai Metro Rail ,Parliament Building ,Dimuka ,MPs ,D. R. ,
× RELATED சென்னை சிக்னல்களில் பசுமை பந்தல் அமைக்க மாநகராட்சி திட்டம்!