×

போளூர் அரசு ஆண்கள் பள்ளியில் கலெக்டர் தலைமையில் மாணவர்கள் போதை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு

போளூர் : போளூர் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் மாணவர்கள் போதை ஒழிப்பு உறுதிமொழி ஏற்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்கள் போதை ஒழிப்பு உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் கலால் டிஎஸ்பி ரமேஷ்ராஜ் தலைமை தாங்கினார்.

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேஷ்முர்த்தி முன்னிலை வகித்தார். போளூர் டிஎஸ்பி கோவிந்தசாமி வரவேற்றார். இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலெக்டர் பாஸ்கரபாண்டியன் கலந்து கொண்டு மாணவர்களுடன் போதை ஒழிப்பு உறுதி மொழி ஏற்று பேசியதாவது: தமிழகத்தில் இளைஞர்களின் வாழ்வாதாரம் மிகவும் மோசமான முறையில் ேபாதை பொருட்களுக்கு அடிமையாகி வருகின்றனர். இதனை தடுக்க அரசு பலவகையில் கடுமையாக நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதில் பள்ளி, கல்லூரிகள் மற்றும் கோயில்கள் அருகில் குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும், கிராமங்கள் ேதாறும் சமூக ஆர்வலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசுத்துறை அதிகாரிகள் கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். மாணவர்களாகிய நீங்கள் எண்ணம் முழுவதும் படிப்பில் கவனம் வைத்து கல்வி பயில வேண்டும்.

நல்ல ஒழுக்கத்தையும், கல்வி கற்று திகழ்கிறனோ அவன் சமுதாயத்தில் உயர்நிலையை அடைவான். உங்கள் ஊரில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை விற்றால் காவல் துறைக்கு தகவல் தெரிவியுங்கள். மேலும் உங்கள் குடும்பத்தில் யாராவது போதை பொருட்களை பயன்படுத்தினால் அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, மாசுகட்டுப்பாடு செயற்பொறியாளர் காமராஜ், ஆரணி கோட்டாட்சியர் தனலட்சுமி, இன்ஸ்பெக்டர் ஜெயபிரகாஷ், தாசில்தார் வெங்கடேசன், செயல் அலுவலர் முகம்மத்ரிஸ்வான், நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் ஜெயவேலு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post போளூர் அரசு ஆண்கள் பள்ளியில் கலெக்டர் தலைமையில் மாணவர்கள் போதை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு appeared first on Dinakaran.

Tags : Polur Government Boys School ,Collector ,Polur ,Polur Government Boys Higher Secondary School ,Bhaskara Pandian ,Tiruvannamalai District ,Polur Government Boys' School ,Dinakaran ,
× RELATED பறவைக் காய்ச்சல் எதிரொலி: நாமக்கல்...