×

₹4.55 கோடி மதிப்பில் மேம்பாலம் கட்டும் பணி நெடுஞ்சாலைத்துறை அதிரடி திருச்சி உறையூரில் பெண்ணிடம் 7 பவுன் செயின் பறிப்பு

தில்லைநகர், பிப்.3: திருச்சி உறையூர் பாளையம் பஜார் மெயின் ரோட்டில் உள்ள ராகவேந்திரா குடியிருப்பில் வசித்து வருபவர் ரவிச்சந்திரன் (60). இவர் கடந்த31ம் தேதி தனது மனைவி தேன்மொழியை அழைத்துக் கொண்டு தனது காரில் உறவினரின் திருமணத்திற்கு சென்று விட்டு இரவு 10 மணி அளவில் கரூர் பைபாஸ் ரோட்டில் உள்ள ஒரு ஓட்டலில் உணவு அருந்துவதற்காக காரை நிறுத்தி விட்டு ஓட்டலுக்கு சென்று உணவருந்தினர். பின்னர் வெளியே வந்து காரை நோக்கி நடந்து வந்தனர். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம நபர்கள் தேன்மொழியின் கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு இரு சக்கர வாகனத்தில் ஏறி தப்பியோடி விட்டனர். இதனை சற்றும் எதிர்பாராத தேன்மொழி நிலை தடுமாறி கீழே விழுந்தார். உடனடியாக ரவிச்சந்திரன் உறையூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்ததன்பேரில் குற்றப்பிரிவு ஆய்வாளர் முனியாண்டி வழக்கு பதிவு செய்து , சிசிடிவி கேமரா மூலம் ஆய்வுகள் மேற்கொண்டு இக்குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

The post ₹4.55 கோடி மதிப்பில் மேம்பாலம் கட்டும் பணி நெடுஞ்சாலைத்துறை அதிரடி திருச்சி உறையூரில் பெண்ணிடம் 7 பவுன் செயின் பறிப்பு appeared first on Dinakaran.

Tags : Highways Department ,Trichy Vrayur ,Thillainagar ,Ravichandran ,Raghavendra ,Palayam Bazar Main Road, Trichy ,Thenmozhi ,
× RELATED அதிமுக பிரமுகர் வீட்டில் வருமான வரித்துறையினர் ரெய்டு