×

அமைச்சர் ரகுபதி பெருமிதம் சிறுதானியங்களில் மதிப்பு கூட்டுதல் மதுரைக்கு கண்டுணர்வு பயணம்

 

புதுக்கோட்டை, பிப்.3: புதுக்கோட்டை மாவட்டம் குன்றாண்டார்கோவில் வட்டாரம் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை மாநில விரிவாக்க திட்டங்களின் உறுதுணை சீரமைப்புத் திட்டத்தின் கீழ் 2023-24-ம் ஆண்டிற்கு சிறுதானியங்களில் மதிப்பு கூட்டுதல் மாநிலத்திற்குள்ளான கண்டுணர்வு பயணம் வேளாண்மை கல்லூரி நபார்டு, மதுரைக்கு அழைத்து செல்லப்பட்டனர். இக்கண்டுணர்வு பயணத்தினை குன்றாண்டார்கோவில் வேளாண்மை உதவி இயக்குநர்(பொ) மதியழகன் துவக்கி வைத்தார். மதுரை நபார்டு மேலாளர் பரத் குமார், சிறுதானியங்களில் மதிப்பு கூட்டுதல் தொழில்நுட்பங்கள், மதிப்பு கூட்டு பொருள்கள் தயாரிக்கும் முறைகள் மற்றும் தரக்கட்டுபாடுகள் குறித்தும் பற்றி விரிவாக எடுத்துக் கூறினார். சிறுதானியங்களை மதிப்பு கூட்டி அப்பொருட்களை விற்பனைக்கு எடுத்து வர தேவையான அனைத்து வரைமுறைகளையும் விவசாயிகளுக்கு எடுத்துக் கூறினார்.

ஆய்வக பொறுப்பாளர் அனிதா, மதிப்பு கூட்டுதலில் பயன்படுத்தப்படும் இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் செயல்பாடுகள் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துக் கூறினார். மேலும் மதிப்பு கூட்டுதலில் பயன்ப்படுத்தப்படும் இயந்திரங்களை விவசாயிகளுக்கு காண்பித்தார். விவசாயிகள் பால் சார்ந்த பொருட்களான பால், தயிர், பால்கோவா, பன்னீர் தயாரிக்கும் முறைகள் மற்றும் கால்நடை தீவனம் தயாரிக்கும் முறைகளை பார்வையிட்டனர். முன்னதாக வேளாண்மை அலுவலர் பூவிழிச்செல்வி விவசாயிகளை வரவேற்று பேசினார். இறுதியில் வட்டார தொழில்நுட்ப மேலாளர் ஆனந்தஜோதி நன்றி கூறினார். இக்கண்டுணர்வு பயணத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தை சார்ந்த 50 விவசாயிகள் கலந்து கொண்டனர். இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளர் சுப்ரமணி மற்றும் வெற்றிச்செல்வி செய்திருந்தனர். இத்தகவலை குன்றாண்டார்கோவில் வேளாண்மை உதவி இயக்குநர் மதியழகன் தெரிவித்துள்ளார்.

The post அமைச்சர் ரகுபதி பெருமிதம் சிறுதானியங்களில் மதிப்பு கூட்டுதல் மதுரைக்கு கண்டுணர்வு பயணம் appeared first on Dinakaran.

Tags : Minister ,Raghupathi Perumitam ,Madurai ,Pudukottai ,Pudukottai District Kunandarkoil District Agriculture Technology Management Agency ,Agriculture College ,NABARD, Madurai ,Raghupathi ,
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...