×

கடல்சார் பாதுகாப்புக்காக டிஜிபவுட்டி, ஏடன் வளைகுடா, சோமாலியாவில் இந்திய படை: மக்களவையில் தகவல்

புதுடெல்லி: மக்களவையில் ஒன்றிய பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் அஜய்பட் பதில் அளித்து கூறியதாவது: 2008ம் ஆண்டு முதல் ஏடன் வளைகுடா மற்றும் ஆப்பிரிக்காவின் கிழக்கு கடற்கரை பகுதிகளில் கடற்கொள்ளையர் தடுப்பு ரோந்து பணிகளுக்காக இந்திய கடற்படை தனது பிரிவுகளை அனுப்பியுள்ளது. இதன்மூலம் மொத்தம் 3,440 கப்பல்கள் மற்றும் 25,000 க்கும் மேற்பட்ட கடற்படையினர் பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். செங்கடலில் தாக்குதல்களில் ஈடுபட்டவர்களின் தகவல்கள், அதற்கான ஆதாரங்கள் மற்றும் வீரர்களை அடையாளம் காண கடற்படை நட்பு நாடுகளுடன் தகவல்களை இந்தியா பகிர்ந்து கொள்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

The post கடல்சார் பாதுகாப்புக்காக டிஜிபவுட்டி, ஏடன் வளைகுடா, சோமாலியாவில் இந்திய படை: மக்களவையில் தகவல் appeared first on Dinakaran.

Tags : force ,Djibouti, Gulf of Aden, Somalia ,Lok Sabha ,New Delhi ,Union Minister of State for Defense ,Ajaipat ,Indian Navy ,Gulf of Aden ,East Coast of Africa ,Djibouti, ,Gulf of Aden, Somalia ,Lok ,Sabha ,
× RELATED விருதுநகர் மக்களவை தொகுதி பாஜ தேர்தல்...