×

தேனி மாவட்டத்தில் 42 வாகனங்களின் தகுதிச் சான்று ரத்து

தேனி, பிப். 3: தேனி மாவட்டத்தில் கடந்த ஓராண்டு காலத்தில் சாலையில் ஓடுவதற்கு தகுதியற்றதாக கருதப்படும் 42 வாகனங்களின் தகுதிச் சான்று ரத்து செய்யப்பட்டுள்ளது. தேனி வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரிகள் வாகனங்கள் தணிக்கையில் ஈடுபடுவது வழக்கம். இதில் வாகனங்கள் முறையாக இயக்கப்படுகிறதா அதற்கான ஆவணங்கள் முறையாக உள்ளதா, வாகனங்கள் இயக்குவதற்கு தகுதியானவையா என்பது குறித்து தணிக்கை செய்து வருகிறது.

இதன்படி கடந்த 2023ம் ஆண்டு ஜன.1ம் தேதி முதல் டிச.31ம் தேதி வரை தேனி மாவட்டத்தில் 17 மினி பேருந்துகள், 1,114 சரக்கு வாகனங்கள், 248 ஆம்னி பேருந்துகள், 552 மேக்சி கேப் வாகனங்கள், 142 வாடகை கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் மீது 3,297 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் ஒரு மினி பேருந்து, 60 சரக்கு வாகனங்கள், 9 ஆம்னி பேருந்துகள், 12 மேக்ஸ் கேப் வாகனங்கள், 3 கார்கள் உட்பட 455 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதுதவிர அபராதம் வரிவசூலித்த வகையில் ரூ.ஒரு கோடியே 75 லட்சத்து 5 ஆயிரத்து 396 அபராதம் வரி வசூலாகவும், அபராத கட்டணமாகவும், சாலை ஆய்வின் போதும், அலுவலகத்தில் நேரடியாகவும் வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த ஆண்டில் போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு செய்ததில் சாலையில் ஓட தகுதி இல்லாத நிலையில் இருந்த 42 வாகனங்களுக்கான தகுதிச் சான்றுகளை ரத்து செய்துள்ளதாக தேனி வட்டார போக்குவரத்து அலுவலர் செல்வகுமார் தெரிவித்துள்ளார்.

The post தேனி மாவட்டத்தில் 42 வாகனங்களின் தகுதிச் சான்று ரத்து appeared first on Dinakaran.

Tags : Theni district ,Theni ,Theni District Transport Office ,Dinakaran ,
× RELATED கோம்பை பகுதியில் வாகன...