×

இளையான்குடி பகுதியில் நெல் கொள்முதல் நிலையம் தேவை

 

இளையான்குடி, பிப். 3: இளையாங்குடி வட்டாரம் சாலைக்கிராமம், சூராணம், தாயமங்கலம், அ.திருவுடையார்புரம், இளையான்குடி உள்ளிட்ட பகுதிகளில், நடப்பாண்டில் சுமார் 16 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் நெல் விவசாயம் நடைபெற்றுள்ளது. இதில் என்எல்ஆர், ஜோதி, டீலக்ஸ், ஆர்என்ஆர் உட்பட்ட 10க்கும் மேற்பட்ட வகை நெல் ரகங்களை நேரடி விதைப்பு முறையில் விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். தற்போது இந்தப் பகுதியில் நெல் அறுவடை பணிகள் நடைபெற்று வருகிறது.

இருப்பினும் இங்கு அறுவடை செய்த நெல்ைல விவசாயிகள் பெரும்பாலும் தனியார் வியாபாரிகளிடம் குறைந்த விலைக்கு விற்று வருகிறார்கள். இதனால் விவசாயிகள் நஷ்டமடைகின்றனர். கடந்த மாதத்தில் பெய்த தொடர் மழை மற்றும் பூச்சி தாக்குதலால் நெல் விவசாயத்தில் இழப்பு ஏற்பட்டுள்ள விவசாயிகளுக்கு, நெல் கொள்முதல் நிலையங்களை திறக்காமல் இருப்பது கவலையை ஏற்படுத்தி உள்ளது. அதனால் இளையான்குடி வட்டாரத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை விரைவாக திறக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post இளையான்குடி பகுதியில் நெல் கொள்முதல் நிலையம் தேவை appeared first on Dinakaran.

Tags : Ilayayankudi ,Ilayayankudi District ,Saaligram ,Suranam ,Thayamangalam ,A. Thiruvadayarpuram ,Ilaiyayankudi ,NLR ,Jyoti ,Deluxe ,RNR ,
× RELATED சூராணத்தில் நோய் பாதித்த நாய்கள் அதிகரிப்பு