×

நண்பரின் பிறந்தநாள் விழாவில் பங்கேற்ற கல்லூரி மாணவர் திடீர் சாவு

 

கோவை, பிப். 3: உடுமலை பள்ளப்பாளையத்தை சேர்ந்தவர் பேச்சிமுத்து. இவரது மகன் கவுசிக்ராம் (21). இவர், கோவை குனியமுத்தூர் சந்தியா நகரில் தனி அறையில் நண்பர்களுடன் தங்கி தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. 3ம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் கடந்த 31ம் தேதி இரவு அவரது நண்பரின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட பின் அவரது அறைக்கு சென்றார். நள்ளிரவு 2 மணியளவில் கவுசிக் ராமிற்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் குளித்து விட்டு மீண்டும் உறங்க சென்றார்.

காலை 9 மணி ஆகியும் எழவில்லை. நண்ர்கள் எழுப்பியும் அவர் அசையாமல் கிடந்தார். இதையடுத்து கவுசிக்ராமை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்ததாக கூறினர். இதுகுறித்த புகாரின் பேரில் குனியமுத்தூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். நண்பரின் பிறந்தநாள் விழாவில் பங்கேற்ற கல்லூரி மாணவர் திடீரென உயிரிழந்த சம்பவம் அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

The post நண்பரின் பிறந்தநாள் விழாவில் பங்கேற்ற கல்லூரி மாணவர் திடீர் சாவு appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Pachimuthu ,Udumalai Pallapalayam ,Kaushikram ,Kuniyamuthur Sandhya Nagar, Coimbatore ,
× RELATED கேட்டட்’ குடியிருப்புவாசிகள் தங்களது...