×

ஊழல் என்று விஜய் குறிப்பிடுவது பாஜவை பற்றி தான் இருக்கும்: மாஜி அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது: நடிகர் விஜய் புதிய கட்சியை தொடங்கியிருக்கிறார். வாழ்த்துகள், அதற்காக அவர் கட்சி எங்களுக்கு போட்டி என்று சொல்வது வேடிக்கையாக இருக்கிறது. எங்களுக்கு போட்டியாக எந்த கட்சியும் இல்லை. எங்களுக்கு நாங்கள் தான் போட்டி. சட்டசபை தேர்தலில் ஒரு சரிவு எங்களுக்கு இருந்தது. அதுவும் 3 சதவீதம் தான், 30 ஆண்டுகள் ஆண்ட இயக்கம் இது. விஜய் ஊழல் பற்றி குறிப்பிடுவது பாஜவாக தான் இருக்கும். எத்தனை கட்சிகள் புதியதாக வந்தாலும் எங்களை ஒன்றும் செய்ய முடியாது. மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். கட்சி ஆரம்பிப்பவர்கள் எல்லோரும் நாங்கள் தான் ஆட்சி அமைப்போம் என்று சொல்வது இயல்பு தானே. மக்கள் தானே சீர்தூக்கி பார்ப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

The post ஊழல் என்று விஜய் குறிப்பிடுவது பாஜவை பற்றி தான் இருக்கும்: மாஜி அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Vijay ,BJP ,minister ,Jayakumar ,CHENNAI ,AIADMK ,Former minister ,
× RELATED நடிகரும் தமிழக வெற்றி கழகத் தலைவருமான...