×

ஜெயலலிதா பிறந்தநாள் விழா அதிமுக நிர்வாகிகள் ஆலோசணை

சென்னை: ஜெயலலிதா பேரவையின் மாநில செயலாளர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு தெரிவிப்பது, ஜெயலலிதாவின் 76வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு ஏழை, எளியவர்கள், மகளிர் முதியோர்கள், மாணவர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், மாற்றுத்திறனாளிகள், கண் பார்வையற்றோர்கள் உள்ளிட்ட அனைத்து பிரிவினரும் பயன் அடைகின்ற வகையில் நலத்திட்ட உதவிகள், மருத்துவ முகாம், ரத்ததான முகாம், கண்தான முகாம், விளையாட்டு போட்டிகள், பேச்சு போட்டி, கவிதை கட்டுரை போட்டிகள் நடத்தி சிறப்பாக கொண்டாட வேண்டும்.

The post ஜெயலலிதா பிறந்தநாள் விழா அதிமுக நிர்வாகிகள் ஆலோசணை appeared first on Dinakaran.

Tags : Jayalalitha ,AIADMK ,CHENNAI ,Rayapetta, Chennai ,Jayalalithaa Assembly ,State ,RB Udayakumar ,Edappadi Palaniswami ,General Secretary ,Jayalalithaa ,
× RELATED சொல்லிட்டாங்க…