புழல்: நல்லூர் ஊராட்சியில், ரேஷன் கடை திறப்பு விழா நேற்று நடைப்பெற்றது. செங்குன்றம் அடுத்த நல்லூர் ஊராட்சிக்குட்பட்ட சிவந்தி ஆதித்தன் நகரில் சுமார் 3000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இங்கு 1300க்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுகள் உள்ளது. இங்கு வாடகை கட்டிடத்தில் பல ஆண்டுகளாக இருந்து வந்த ரேஷன் கடைக்கு சொந்த கட்டிடம் கட்ட வேண்டும் என பகுதி பொதுமக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தனர். இதன் அடிப்படையில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 2022-2023 ஆண்டுக்கான திட்டத்தில் ரூ.11.77 லட்சம் மதிப்பீட்டில் ரேஷன் கடை கட்டி முடிக்கப்பட்டது.
இதன் திறப்பு விழாவுக்கு நேற்று சோழவரம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளரும் ஒன்றிய குழு துணை தலைவரான கருணாகரன் தலைமை தாங்கினார். சென்னை வடக்கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும் மாதவரம் சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏவுமான எஸ்.சுதர்சனம் புதிய ரேஷன் கடையை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் அமிர்தவல்லி டில்லி, ஒன்றிய கவுன்சிலர்கள் துரைவேலு, ருக்மணி ரவிச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
The post நல்லூர் ஊராட்சியில் ரேஷன் கடை திறப்பு appeared first on Dinakaran.