×

காரப்பாக்கத்தில் உள்ள சதுப்பு நிலத்தை இந்திய புள்ளியல் துறைக்கு ஒதுக்கிய அரசாணை ரத்து: உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

சென்னை: சென்னை காரப்பாக்கம் பகுதியில் சதுப்பு நிலத்தை இந்திய புள்ளியியல் நிறுவனத்திற்கு மாற்றிய வருவாய் துறை உத்தரவை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம், அந்த நிலத்தை மீட்டு பராமரிக்கும்படி உத்தரவிட்டுள்ளது. சென்னை காரப்பாக்கத்தில் பக்கிங்காம் கால்வாயை ஒட்டிய 38 ஏக்கர் நிலப்பகுதியை சதுப்பு நிலம் என வகைப்படுத்திய வருவாய் துறை, அதில் 8 ஏக்கர் அளவிற்கு தரமணியில் செயல்பட்டுவரும் இந்திய புள்ளியியல் நிறுவனத்திற்கு மாற்றம் செய்து, கடந்த 2014ம் ஆண்டு மே 16ம் தேதி அரசாணை பிறப்பித்தது. இதை எதிர்த்து சென்னை ஈஞ்சம்பாக்கத்தை சேர்ந்த இயற்கை அறக்கட்டளையின் நிறுவனர் ஐ.ஹெச்.சேகர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அவர் தாக்கல் செய்த மனுவில், பக்கிங்காம் கல்வாயில் இருந்து துரைப்பாக்கம்-ஒக்கியம் கால்வாய் வழியாக வரும் உபரி தண்ணீரை சேகரிக்க பயன்படும் சதுப்பு நிலப் பகுதியை பாதுகாக்க வேண்டிய அரசே அந்நிலத்தை புள்ளியியல் நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது. எனவ, அரசின் இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.வி.கங்கபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு, சதுப்பு நிலத்தை இந்திய புள்ளியியல் நிறுவனத்திற்கு ஒதுக்கிய உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. இந்திய புள்ளியியல் நிறுவனத்திற்கு மாற்று இடத்தை அரசு ஒதுக்க வேண்டும். புள்ளியல் துறைக்கு ஒதுக்கப்பட்ட சதுப்பு நிலத்தை மீட்டு பராமரிக்க வேண்டும். அந்த சதுப்பு நிலத்தில் எந்த விதமான ஆக்கிரமிப்புகளையும் அனுமதிக்க கூடாது என்று உத்தரவிட்டனர்.

 

The post காரப்பாக்கத்தில் உள்ள சதுப்பு நிலத்தை இந்திய புள்ளியல் துறைக்கு ஒதுக்கிய அரசாணை ரத்து: உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Karapakkam ,Indian Statistics Department ,CHENNAI ,Chennai High Court ,Indian Statistical Institute ,Buckingham canal ,Karapakkam, Chennai ,Court ,Dinakaran ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...