×

நாடாளுமன்ற தேர்தல் சமக நிலைப்பாடு 15 நாளில் முடிவு அறிவிக்கப்படும்: சரத்குமார் பேட்டி

சென்னை: அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி (சமக) மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்றம், சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் சென்னை தி.நகஙை கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. கட்சி தலைவர் சரத்குமார் தலைமை தாங்கினார். பொருளாளர் சுந்தரேசன், ஒருங்கிணைப்பாளர் சுந்தர், துணை பொதுச் செயலாளர் மகாலிங்கம் ஈஸ்வரன் உள்பட பலர் பங்கேற்றனர்.

தேர்தல் குறித்து முடிவு எடுக்க சரத்குமாருக்கு முழு அதிகாரம் அளித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பிறகு சரத்குமார் அளித்த பேட்டி: நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி சேர்கிறோமா, இல்லையா என்பது குறித்து உயர்மட்ட குழுவுடன் தனிப்பட்ட முறையில் ஆலோசித்து அடுத்த 15 நாளுக்குள் முடிவு அறிவிக்கப்படும் என்றார்.

 

The post நாடாளுமன்ற தேர்தல் சமக நிலைப்பாடு 15 நாளில் முடிவு அறிவிக்கப்படும்: சரத்குமார் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Sarathkumar ,CHENNAI ,All India Samatwa People's Party ,Samaka) State Executives ,District Secretaries ,Parliamentarians ,Assembly Constituency Officers ,D. Naganai ,Treasurer ,Sundaresan ,Samaka ,Dinakaran ,
× RELATED பிரசாரத்துக்கு நடுவே கொஞ்சம் டான்ஸ்.....