×

மதுராந்தகம் அருகே மோச்சேரியில் அரசு பள்ளி சுற்றுச்சுவர் மீது கனரக லாரி கவிழ்ந்து விபத்து

மதுராந்தகம்: மதுராந்தகம் நகராட்சியில் அரசு பள்ளி சுற்றுச்சுவர் மீது கனரக லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத் தியது. மதுராந்தகம் நகராட்சிக்கு உட்பட்ட மோச்சேரி அரசு நடுநிலைப்பள்ளியில் 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியை ஒட்டி செல்லும் சாலையில் நேற்று கனரக லாரி ஒன்று மண் ஏற்றிக்கொண்டு சென்றது.

அப்போது, லாரி திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளியின் சுற்றுச்சுவர் மீது கவிழ்ந்து சாய்ந்தபடி நின்றது. இதில், பள்ளியின் சுற்றுச்சுவர் லேசாக இடிந்தது. பிற்பகல் 3 மணியளவில் நடைபெற்ற இந்த விபத்தின்போது பள்ளி மாணவ, மாணவியர் வகுப்பறைக்குள் இருந்ததால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எவ்வித காயமும் இல்லை. இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

The post மதுராந்தகம் அருகே மோச்சேரியில் அரசு பள்ளி சுற்றுச்சுவர் மீது கனரக லாரி கவிழ்ந்து விபத்து appeared first on Dinakaran.

Tags : Mocheri ,Madhurandakam ,Maduraandakam ,Mocheri Government Middle School ,Maduranthakam Municipality ,Madurandakam ,Dinakaran ,
× RELATED மதுராந்தகம் வாக்கு சாவடியில் தேர்தல் பார்வையாளர்கள் நேரில் ஆய்வு