×

வெங்கடாபுரம் ஊராட்சியில் ரூ.9.5 லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்: எம்எல்ஏ திறந்து வைத்தார்

செங்கல்பட்டு: வெங்கடாபுரம் ஊராட்சியில் ரூ.9.5 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட நவீன குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை, வரலட்சுமி மதுசூதனன் எம்எல்ஏ திறந்து வைத்தார். செங்கல்பட்டு அடுத்த வெங்கடாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட தெள்ளிமேடு பகுதியில் ஆயிரத்திற்கும் அதிகமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதி பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று கடந்த 2021 – 2022ம் ஆண்டு செங்கல்பட்டு சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.9.5 லட்சம் மதிப்பில் நவீன சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் அமைக்கப்பட்டது.

இந்த நவீன சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் முழுமையாக அமைக்கப்பட்டு கடந்த இரண்டு ஆண்டுகள் ஆகியும் இந்த நவீன சுத்திகரிப்பு நிலையம் திறப்பு விழா நடைபெறாமல் இருந்தது. இது குறித்து கடந்த 10ம் தேதி தினகரன் நாளிதழில் செய்தி வெளியானது. இதனை தொடர்ந்து, செங்கல்பட்டு எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன், நவீன குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை நேற்று முன்தினம் திறந்து வைத்து பொதுமக்கள் பயன்பட்டிற்கு கொண்டு வந்தார்.

இதனை தொடர்ந்து, புதிதாக போடப்பட்ட சிமெண்ட் சாலையையை திறந்து வைத்தார். நவீன சுத்திகரிப்பு நிலையத்தை திறந்து வைத்ததை தொடர்ந்து தினகரன் நாளிதழிழுக்கு கிராமமக்கள் நன்றி தெரிவித்தனர். இந்த விழாவில் காட்டாங்கொளத்தூர் திமுக ஒன்றிய செயலாளர் ஆப்பூர் சந்தானம், வெங்கடாபுரம் தர்மன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்துக்கொண்டனர்.

The post வெங்கடாபுரம் ஊராட்சியில் ரூ.9.5 லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்: எம்எல்ஏ திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Venkatapuram panchayat ,MLA ,Chengalpattu ,Varalakshmi Madhusudhanan ,Thellimedu ,Venkatapuram ,panchayat ,
× RELATED தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் நெரிசலை...