×

சித்தூர் அடுத்த யாதமரி மண்டலத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அதிகாரிகள் ஆய்வு-ஜில்லா பரிஷத் துணை சேர்மன் பங்கேற்பு

சித்தூர் : சித்தூர் அடுத்த யாதமரி மண்டலத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அதிகாரிகள் மற்றும் ஜில்லா பரிஷத் துணை சேர்மன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.சித்தூர் மாவட்டம் யாதமரி மண்டலத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஜில்லா பரிஷத் துணை சேர்மன் தனஞ்செய் ரெடி அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்தார். பின்னர் ஜில்லா பரிஷத் துணைச் சேர்மன் தனஞ்செய் ரெட்டி கூறியதாவது: 50 ஆண்டுகளாக எப்போதும் இல்லாத அளவிற்கு சித்தூர் மாவட்டத்தில் பலத்த மழை கொட்டி தீர்த்தது. சித்தூர் மாவட்டம் முழுவதும் ஏராளமான கிராமங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பலத்த சேதம் அடைந்தது. மாநில முதல்வர் ஜெகன்மோகன் உத்தரவின்பேரில் மாவட்டம் முழுவதும் அனைத்து பகுதிகளுக்கு சென்று போர்க்கால அடிப்படையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிப் பொருட்கள் வழங்கி வருகிறோம். அதேபோல் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று ஆய்வு நடத்தி அப்பகுதிகளில் அதிகாரிகளின் உதவியுடன் சீரமைத்து வருகிறோம். மேலும் சித்தூர் மாவட்டம் யாதமரி மண்டலத்தில் 184 கொல்லப்பள்ளி, வேணுகோபால் புரம், 14 கண்றிக   உள்ளிட்ட கிராமங்களில் கிராமங்களுக்குச் செல்லும் சாலைகள் மழை நீரால் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் அப்பகுதியில் உள்ள கிராமங்களுக்குச் செல்ல பொதுமக்கள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். அவர்கள் மாற்றுப்பாதையில் செல்ல வேண்டுமென்றால் 15 கிலோமீட்டர் சுற்றிச் செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பொது மக்களின் நலன் கருதி போர்க்கால அடிப்படையில் சேதமடைந்த சாலைகளை சீர் செய்ய அதிகாரிகளுடன் நேரில் சென்று பார்வையிட்டு நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதே போல் சித்தூர் மாவட்டம் முழுவதும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சாலைகளை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மிக விரைவில் பொதுமக்களுக்கு எந்த ஒரு இடையூறு இல்லாத வகையில் சாலைகள் அமைத்து தரப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார். இதில் எம்பிடி ஓ அதிகாரி ஹரி பிரசாத்  எம்பி பி.சுரேஷ் உள்பட கிராம வருவாய்த்துறை அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டு  மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சாலைகளை ஆய்வு செய்தனர்….

The post சித்தூர் அடுத்த யாதமரி மண்டலத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அதிகாரிகள் ஆய்வு-ஜில்லா பரிஷத் துணை சேர்மன் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Chittoor ,Yatamari Mandal ,Zilla Parishad ,Vice-Chairman ,Yatamari ,Dinakaran ,
× RELATED மழையால் மகசூல் குறைந்து தக்காளி விலை கிடுகிடு உயர்வு