×

நடிகர் விஜய்யின் அரசியல் வருகைக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி

சென்னை: திரைப்படத்துறையில் செல்வாக்குமிக்கவராக கலைப்பணி ஆற்றும் விஜய் அவர்கள் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்கும் அறிவிப்பை வெளியிட்டிருப்பதை வாழ்த்தி வரவேற்கிறேன். மக்களைப் பிளவுபடுத்துகிற அரசியலுக்கு எதிராகவும், மக்களின் வளர்ச்சிக்கு தடையாகவும் இருக்கிற சக்திகளுக்கு எதிராக அவர் கருத்து கூறியிருப்பது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது.

பிறப்பொக்கும் எல்லா உயிருக்கும் என்று சுட்டிக்காட்டி அனைவரும் பிறப்பால் சமம் என்ற கருத்தை அவர் வலியுறுத்தியிருப்பது இன்றைய அரசியல் சூழலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அரசியல் கட்சியை ஏன் தொடங்குகிறோம் என்பதற்கான அவரது விளக்கம் தமிழக அரசியலில் ஆரோக்கியமான சூழல் உருவாக உதவும் என்று நம்புகின்றேன். அவரது முயற்சி வெற்றி பெற வாழ்த்துகிறேன்

The post நடிகர் விஜய்யின் அரசியல் வருகைக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி appeared first on Dinakaran.

Tags : Vijay ,Tamil Nadu Congress ,President K. S. ,Chennai ,Tamil Nadu Victory Club ,President ,K. S. Alagiri ,
× RELATED நடிகரும் தமிழக வெற்றி கழகத் தலைவருமான...