×

இப்படி மோசமான வார்த்தைகளையா பயன்படுத்த வேண்டும்?: சி.வி.சண்முகத்திற்கு ஐகோர்ட் கேள்வி

சென்னை: ஆளுங்கட்சியை எதிர்த்து பேச உரிமை உள்ளது என்றாலும் எதற்காக இப்படி மோசமான வார்த்தைகளையா பயன்படுத்த வேண்டும்? என்று சி.வி.சண்முகத்திற்கு சென்னை நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் கேள்வி எழுப்பியுள்ளார். எம்.பி.யாக உள்ள ஒருவர், முன்னாள் அமைச்சராக இருந்தவர், கைத்தட்டுதல்களுக்காக இது போன்ற வார்த்தகளை பயன்படுத்துவதை ஏற்கமுடியாது என்று நீதிபதி சி.வி.சண்முகத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். தாலிக்கு தங்கம் திட்டம், கைது உள்ளிட்ட விவகாரத்தில் தமிழ்நாடு அரசை விமர்சித்து சி.வி.சண்முகம் பேசியிருந்தார். அது தொடர்பாக வெறுப்பை உண்டாக்குதல், மக்களிடையே தவறான தகவல்களை அளித்தல் உள்ளிட்ட பிரிவுகளில் சி.வி.சண்முகம் மீது விழுப்புரம் போலீஸ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

The post இப்படி மோசமான வார்த்தைகளையா பயன்படுத்த வேண்டும்?: சி.வி.சண்முகத்திற்கு ஐகோர்ட் கேள்வி appeared first on Dinakaran.

Tags : ICourt ,Shanmukha ,CHENNAI ,N. Anand Venkatesh ,Shanmugam ,
× RELATED ஓட்டுக்கு பணம் தருவதை தவிர்க்க...