×

முட்டை தொக்கு

தேவையானவை:

முட்டை – 4,
வெங்காயம் – 4,
தக்காளி – 2,
பச்சைமிளகாய் – 1,
இஞ்சி, பூண்டு விழுது – 1 டீஸ்பூன்,
மிளகாய்தூள் – 1 டீஸ்பூன்,
மல்லிதூள் – 1/2 டீஸ்பூன்,
கரம்மசாலா – 1/4 டீஸ்பூன்,
தேவையான அளவு – உப்பு.

செய்முறை:

முட்டையை வேகவைத்து உரித்து சிறியதாக நறுக்கி கொள்ளவும். வாணலியில் எண்ணெய், வெங்காயம் சேர்த்து வதக்கி கொள்ளவும். தக்காளியை விழுதாக அரைத்து வெங்காயத்தில் சேர்க்கவும். உப்பு, பச்சைமிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். பின்னர் மிளகாய்தூள், மல்லிதூள் சிறிதளவு தண்ணீர் சேர்த்து பச்சை வாசனை நீங்கும் வரை வதக்கவும். பின்னர் நறுக்கிய முட்டை, கரம் மசாலா சேர்த்து 1 நிமிடம் வரை வதக்கி இறக்கவும்.

The post முட்டை தொக்கு appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED கோடைகால குழந்தைகள் பராமரிப்பு!