×

எடையூர் மெயின் ரோட்டில் சேதமடைந்த பள்ளி கட்டிடம் இடித்து அகற்றம்: பொதுமக்கள் நன்றி, பாராட்டு

முத்துப்பேட்டை: தினகரன் செய்தி எதிரொலியாக முத்துப்பேட்டை அருகே எடையூர் மெயின் ரோட்டில் சேதமடைந்த பள்ளி கட்டிடம் இடித்து அகற்றப்பட்டது. இதற்கு பொதுமக்கள் நன்றியுடன் பாராட்டு தெரிவித்துள்ளனர். முத்துப்பேட்டை அடுத்த எடையூர் மெயின் ரோட்டில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சுற்று பகுதியை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் பள்ளி வளாகத்தில் பயன்பாட்டில் இல்லாத 2 வகுப்பறை கொண்ட மிகவும் பழமையான ஓட்டு கட்டிடம் ஒன்று பழுதடைந்த நிலையில் இருந்தது. இந்த பழுதடைந்த கட்டிடத்தை இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என பல வருடமாக பள்ளி நிர்வாகம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

ஆனால் கடந்த 10 ஆண்டு ஆட்சியில் இருந்த அதிமுக அரசு கண்டுக்கொள்ளவே இல்லை. இதனால் இந்த கட்டிடம் நாளடைவில் பொலிவு இழந்தது எந்த நேரத்திலும் கட்டிடத்தில் பல பகுதி பாகங்கள் இடிந்து விழும் நிலையில் காணப்பட்டது. இந்த கட்டிடம் இருக்கும் பகுதியில் தான் மாணவர்கள் விளையாடி வருகின்றனர். ஓய்வான நேரத்தில் இங்கு வந்து அமர்ந்து வருகின்றனர். இதனால் மாணவர்களின் உயிருக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே பயன்பாட்டில் இல்லாத இந்த பழுதடைந்த பழைமைய கட்டிடத்தை இடித்து அகற்ற வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் என்று சுட்டிக்காட்டி தினகரன் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது.
சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உத்தரவின் பேரில், பள்ளி வளாகத்தில் இருந்த பழுதடைந்த கட்டிடம் இடித்து அகற்றப்பட்டது. இதனால் மகிழ்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் மற்றும் பெற்றோர் செய்தி வெளியிடப்பட்டு தினகரனுக்கு நன்றி தெரிவித்தனர்.

The post எடையூர் மெயின் ரோட்டில் சேதமடைந்த பள்ளி கட்டிடம் இடித்து அகற்றம்: பொதுமக்கள் நன்றி, பாராட்டு appeared first on Dinakaran.

Tags : Udaiyur Main Road ,Muthuppet ,Dhinakaran ,Udaayur ,Muthupet ,Govt. Panchayat Union Middle School ,Udayoor Main Road ,Dinakaran ,
× RELATED கோடை வெப்பம்: குடிநீர், நீர்மோர்...