×

நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி தொடர்பாக முடிவெடுக்க சரத்குமாருக்கு அதிகாரம் வழங்கி ச.ம.க. தீர்மானம் நிறைவேற்றம்..!!

சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி குறித்து முடிவெடுக்க சமக தலைவர் சரத்குமாருக்கு அதிகாரம் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் நிலைப்பாடு குறித்து முடிவெடுப்பதற்காக சமத்துவ மக்கள் கட்சியின் ஆலோசனை கூட்டம் சென்னை தி.நகரில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. சமக தலைவர் சரத்குமார் தலைமையேற்று ஆலோசனை கூட்டம் நடத்தி வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் ச.ம.க. மாநில, மண்டல, மாவட்ட செயலாளர்கள், பொறுப்பாளர்கள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் ஒட்டுமொத்தமாக 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதில் பிரதானமாக நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி குறித்து முடிவெடுக்கும் அதிகாரத்தை சமக தலைவர் சரத்குமாருக்கு கொடுக்கப்பட்டுள்ளதாக முதல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இரண்டாவதாக படிப்படியாக மது விற்பனை குறைக்கப்பட்டு தமிழகத்தில் மது விலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும், போதையால் பல குற்றங்கள் ஏற்படுவதால் அதனை தடுக்க வேண்டும், தமிழகத்தில் போதை இல்லாத ஒரு நிலையை உருவாக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் சென்னைக்கு அருகில் இருக்கக்கூடிய கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் உருவாக்கப்பட்டுள்ளது. அதற்கு செல்வதற்காக பேருந்து மற்றும் ரயில் வசதிகளை முறையாக ஏற்படுத்தி தர வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு வலியுறுத்தப்பட்டது. அதுமட்டுமின்றி ஒன்றிய அரசு நேற்று தாக்கல் செய்துள்ள இடைக்கால பட்ஜெட்டை சமத்துவ மக்கள் கட்சி முழுமையாக வரவேற்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஏற்கனவே சமத்துவ மக்கள் கட்சியை பொறுத்தவரை 2014, 2019 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தலில் போட்டியிடாமல் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார்கள்.

2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை பொறுத்தவரை முக்கிய முடிவு எடுக்க இருப்பதாகவும், அதில் பாஜக தலைமையிலான கூட்டணிக்கு செல்ல இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதன் அடிப்படையில் கன்னியாகுமரி அல்லது திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதியில் பாஜக சின்னமான தாமரை சின்னத்தில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் தெரிவிக்கின்றன.

The post நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி தொடர்பாக முடிவெடுக்க சரத்குமாருக்கு அதிகாரம் வழங்கி ச.ம.க. தீர்மானம் நிறைவேற்றம்..!! appeared first on Dinakaran.

Tags : Sarathkumar ,CHENNAI ,Samaka ,Equality People's Party ,Dinakaran ,
× RELATED கையை வலுப்படுத்தக் கோரிய ராதிகா: காங்....