×

சென்னையில் கல்லூரி மாணவர்கள் மோதல்: 3 பேர் காயம்; மாணவர்கள் 15 பேருக்கு போலீஸ் வலை

சென்னை: சென்னையில் மாநில கல்லூரி மாணவர்கள் மீது புதுக்கல்லூரி மாணவர்கள் கற்கள், பீர் பாட்டில்களால் தாக்குதல் நடத்தினர். சென்னை ஓமந்தூரார் தோட்டம் அரசு பன்னோக்கு மருத்துவமனை பேருந்து நிறுத்தத்தில் மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டது. கற்கள், பீர் பாட்டில்களால் தாக்குதல் நடத்தியதில் மாநில கல்லூரி மாணவர்கள் 3 பேர் காயமடைந்தனர். தாக்குதல் நடத்திவிட்டு இருசக்கர வாகனங்களில் தப்பிய புதுக்கல்லூரி மாணவர்கள் 15 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

The post சென்னையில் கல்லூரி மாணவர்கள் மோதல்: 3 பேர் காயம்; மாணவர்கள் 15 பேருக்கு போலீஸ் வலை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Pudu College ,State College ,Government Pannoku Hospital ,Omanturar Garden, Chennai ,
× RELATED சிறந்த கல்வி நிறுவனங்கள் பட்டியலில் சென்னை மாநில கல்லூரிக்கு 3வது இடம்