×

(தி.மலை) தொடக்கப் பள்ளியில் காலை உணவு திட்டத்தை கலெக்டர் ஆய்வு மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்தினார் சேத்துப்பட்டு கரைப்பூண்டி சாணார்பாளையம்

 

சேத்துப்பட்டு, பிப். 2: சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கரைப்பூண்டி சாணார்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளில் தமிழக முதல்வரின் காலை உணவு திட்டத்தை கலெக்டர் பாஸ்கரன் பாண்டியன் ஆய்வு செய்து மாணவர்களுடன் அமர்ந்து காலை உணவை அருந்தினார். போளூர் தாலுகாவில் நேற்று உங்களைத் தேடி உங்கள் ஊர் திட்டத்தில் வசூர், வடமாதிமங்கலம் களம்பூர், கேளூர் ஆகிய பகுதியில் உள்ள அங்கன்வாடி மையம், ஆரம்ப சுகாதார நிலையம், இலங்கை தமிழர்கள் அகதி முகாம், பழங்குடி மக்கள் ஆகியோரை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். அதனை தொடர்ந்து அனைத்து துறை அதிகாரிகளும் நேற்று முன்தினம் இரவு போளூர் பகுதியில் தங்கி கிராமப்புறத்தில் மின்விளக்கு குடிநீர் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்தனர்.

இந்நிலையில் சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றியம், கரைப்பூண்டி சாணார் பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் தமிழ்நாடு முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தினை நேற்று பார்வையிட்டார். மேலும் 46 மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து ஆய்வு செய்து உணவருந்தி மாணவர்களிடம் கலந்துரையாடினார். மேலும் 46 மாணவ மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் சமையல் மற்றும் உணவுப் மாணவர்களுக்கு தரமான உணவுகளை வழங்க ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தினார். நிகழ்ச்சியில் அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர். கரைபூண்டி சாணார்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை உணவினை கலெக்டர் தெ.பாஸ்கர பாண்டியன் ஆய்வு செய்து மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்தினார்.

 

The post (தி.மலை) தொடக்கப் பள்ளியில் காலை உணவு திட்டத்தை கலெக்டர் ஆய்வு மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்தினார் சேத்துப்பட்டு கரைப்பூண்டி சாணார்பாளையம் appeared first on Dinakaran.

Tags : T.Malai ,Sethupattu ,Karaipoondi ,Chanarpalayam ,Collector ,Baskaran Pandian ,Chief Minister of Tamil Nadu ,Panchayat Union Primary Schools ,Sethupattu Panchayat Union ,Th. Malai ,Sethupattu Karaipoondi Chanarpalayam ,Dinakaran ,
× RELATED வனத்துறை பராமரித்து வந்த 25...