×

ஆவடி காவல் சரகத்துடன் பொன்னேரி, திருப்பாலைவனம்காவல் நிலையங்கள் இணைப்பு: துணை ஆணையர் தொடங்கி வைத்தார், எம்எல்ஏ பங்கேற்பு

 

பொன்னேரி, பிப். 2: ஆவடி காவல் சரகத்துடன் பொன்னேரி, திருப்பாலைவனம் காவல் நிலையங்கள் இணைக்கப்பட்டன. பொன்னேரி, திருப்பாலைவனம் காவல் நிலையங்கள் திருவள்ளூர் மாவட்ட காவல்துறை கட்டுப்பாட்டில் இருந்தது. இந்நிலையில், ஆவடி காவல் ஆணையரகத்திற்கு மாற்றப்பட்டு இணைக்கப்பட்டது. அதன்படி நேற்று அதற்கான பணிகள் துவக்கப்பட்டது. ஆவடி காவல் ஆணையர் சங்கர் உத்தரவின்படி ஆவடி காவல் ஆணையரக துணை ஆணையர் பாலகிருஷ்ணன் குத்துவிளக்கு ஏற்றி கட்டுப்பாட்டு அறையில் வயர்லெஸ் எனப்படும் வான் தந்தி மூலம் காவல் ஆணையரகத்துடன் தொடர்பு ஏற்படுத்தி பணிகளை துவக்கி வைத்தார்.

இதேபோன்று, திருப்பாலைவனம் காவல் நிலையத்தில் பணிகளையும் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். இதில், சிறப்பு அழைப்பாளராக துரை சந்திரசேகர் எம்எல்ஏ கலந்து கொண்டனர்.  ஆணையர் ராஜா ராபர்ட், கூடுதல் கண்காணிப்பாளர் மீனாட்சி, பொன்னேரி நகர் மன்ற தலைவர் பரிமளம் விஸ்வநாதன், மீஞ்சூர், பொன்னேரி காவல் ஆய்வாளர் காளிராஜ், குற்ற பிரிவு ஆய்வாளர் சுதாகர். அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் விஜி, உதவி ஆய்வாளர்கள், தனிப்பிரிவு காவலர்கள் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் ஜலந்தர் ஜெய்சங்கர் கார்த்தி ஜெகன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

The post ஆவடி காவல் சரகத்துடன் பொன்னேரி, திருப்பாலைவனம்காவல் நிலையங்கள் இணைப்பு: துணை ஆணையர் தொடங்கி வைத்தார், எம்எல்ஏ பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Ponneri ,Tirupalaivanam Police Stations ,Avadi Police Sargam ,MLA ,Bonneri ,Thirupalivanam police stations ,Avadi police department ,Tiruvallur District Police ,Aavadi ,Tiruppalaivanam Police Stations ,Avadi Police ,Dinakaran ,
× RELATED தேர்தலுக்காக பள்ளிகளில் ஒட்டப்பட்ட ஸ்டிக்கர்களை அகற்றுவதில் சிரமம்