×

நாமக்கல்லில் புத்தக திருவிழா

 

நாமக்கல், பிப்.2: நாமக்கல்லில் 6ம் நாள் புத்தக திருவிழா நடைபெற்றது. இதில் முன்னாள் தலைமை செயலாளர் மற்றும் எம்எல்ஏ பங்கேற்றனர். நாமக்கல் அரசு ஆண்கள் தெற்கு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில், 6ம் நாள் புத்தக திருவிழா நேற்று நடைபெற்றது. கலெக்டர் உமா தலைமை வகித்தார். மாவட்ட எஸ்பி ராஜேஸ்கண்ணன், ராமலிங்கம் எம்எல்ஏ ஆகியோர் முன்னிலை வகித்தனர். புத்தக திருவிழாவில், நாமக்கல் மாவட்ட இயல் இசை கிராமிய கலைஞர்கள் சங்கம், நடராஜ நர்த்தன நாட்டியாலயா பள்ளி மாணவிகளின் பரத நாட்டியம் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவில், தமிழக அரசின் முன்னாள் தலைமை செயலாளர் இறையன்பு, இலக்கியத்தில் கோழிகள் என்ற தலைப்பிலும், நாமக்கல் தமிழ்ச்சங்க செயலாளர் கோபால நாராயணமூர்த்தி, சிறகை விரி, சிகரம் தொடு என்ற தலைப்பிலும் பேசினர்.

புத்தகத் திருவிழாவில் அமைக்கப்பட்டிருக்கும் புத்தக அரங்குகள், அறிவியல் கோளரங்கம் மற்றும் தமிழ்நாடு அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்கள் குறித்த புகைப்படக் கண்காட்சி, பல்வேறு அரசுத்துறைகளின் பணிவிளக்க கண்காட்சியினை ஏராளமானோர் ஆர்வத்துடன் பார்வையிட்டனர். மேலும், பள்ளி மாணவ, மாணவிகள் புத்தகங்களை ஆர்வத்துடன் வாங்கி சென்றார்கள். இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் மருத்துவர் சுமன், திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சிவக்குமார், அரசுத்துறை அலுவலர்கள் உட்பட மாணவ, மாணவிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். புத்தக கண்காட்சி இன்றுடன்(2ம் தேதி) நிறைவு பெறுகிறது.

The post நாமக்கல்லில் புத்தக திருவிழா appeared first on Dinakaran.

Tags : Book ,Namakkal ,Chief Secretary ,MLA ,book festival ,Namakkal Government Boys South High School ,Uma… ,Namakallil Book Festival ,Dinakaran ,
× RELATED நூலகத்தில் புத்தக தின விழா