×

நீர்த்தேக்கத்தொட்டி கட்ட பூமி பூஜை

 

போச்சம்பள்ளி, பிப். 2: கொடமாண்டப்பட்டி ஊராட்சி சந்தம்பட்டியில் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ், 30 ஆயிரம் லிட்டர் கொள்ளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டுவதற்காக பூமி பூஜை விழா நடந்தது. மத்தூர் ஒன்றிய திமுக செயலாளர் வசநதரசு தலைமை தாங்கினார். தலைவர் விஜயலட்சுமி பெருமாள், ஊராட்சி மன்ற தலைவர் மலர்கொடி, திமுக மருத்துவர் அணி மாவட்ட துணை தலைவர் டாக்டர் தென்னரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் எம்எல்ஏ நரசிம்மன் கலந்து கொண்டு பூமி பூஜையை துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் துரைசாமி, ஒன்றிய பொறியாளர் ஜமுனா, முன்னாள் தலைவர் சங்கர், மாவட்ட துணை அமைப்பாளர் பால்மூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஊராட்சி செயலர் செந்தில்குமார் நன்றி கூறினார்.

The post நீர்த்தேக்கத்தொட்டி கட்ட பூமி பூஜை appeared first on Dinakaran.

Tags : Bhoomi Puja ,Bochampalli ,Bhumi Pooja ceremony ,Kodamandapatti Panchayat Chandampatti ,Jal ,Mathur Union DMK ,Vasanadarasu ,Bhoomi Pooja ,Dinakaran ,
× RELATED மத்திகிரி அரசு பள்ளியில் கலையரங்கம் கட்டும் பணி