×

சாக்கடை வசதி கோரிய பெண்ணை அவமதித்த அதிமுக கவுன்சிலர் துட்டுவாங்கி தானே ஓட்டு போட்ட…

ஆம்பூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகராட்சி 7வது வார்டுக்குட்பட்ட பகுதி பிலால் நகர். இந்த வார்டின் கவுன்சிலராக அதிமுகவை சேர்ந்த சுரேஷ் பதவி வகித்து வருகிறார். அப்பகுதியில் சிமெண்ட் சாலையுடன் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதில் சாலையின் இருபுறமும் கழிவுநீர் கால்வாய் அமைத்து தர அப்பகுதியினர் நேற்று அங்கு வந்த கவுன்சிலர் சுரேஷிடம் கோரிக்கை விடுத்தனர். அதற்கு பதிலளித்த அதிமுக கவுன்சிலர் சுரேஷ், அப்பகுதியினருக்கு உரிய பதில் தராமல் துட்டுவாங்கினு தானே ஓட்டு போட்ட என அலட்சியமாக பதில் அளித்தார். இதுகுறித்த வீடியோ தற்போது ஆம்பூர் மற்றும் சுற்றுபகுதியில் வைரலாக பரவி வருகிறது.

The post சாக்கடை வசதி கோரிய பெண்ணை அவமதித்த அதிமுக கவுன்சிலர் துட்டுவாங்கி தானே ஓட்டு போட்ட… appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Ampur ,Bilal Nagar ,7th Ward ,Ampur Municipality, Tirupattur District ,Suresh ,
× RELATED ஆம்பூரில் சீல் வைக்காத மின் மீட்டர்...