×

சில்லிபாயிண்ட்…

* மீண்டும் பிரித்வி ஷா
கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இங்கிலாந்தில் நடைபெற்ற உள்நாட்டுத் தொடரில் காயமடைந்தார். அதனால் சுமார் 6மாதங்களாக கிரிக்கெட் விளையாடாமல் ஓய்வில் இருந்தவர் மீண்டும் களம் திரும்பியுள்ளார். அவர் இன்று தொடங்கும் ரஞ்சி கோப்பை 5வது சுற்றில் மும்பை அணிக்காக களம் காண உள்ளார். இந்த தொடரில் பி பிரிவில் உள்ள பெங்கால்-மும்பை அணிகள் இன்று முதல் கொல்கத்தாவில் மோத உள்ளன.

* ரஞ்சி கோப்பை கிரிக்கெட்
ரஞ்சி கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 5வது சுற்று ஆட்டங்கள் இன்று நாட்டின் பல்வேறு நகரங்களில் தொடங்குகின்றன. மொத்தம் 38 அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடரில் தமிழ்நாடு இதுவரை 4 டெஸ்ட்களில் விளையாடி 2 வெற்றி, தலா ஒரு தோல்வி, டிரா என 15 புள்ளிகளுடன் சி பிரிவு புள்ளிப் பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது. அதேபோல் புதுச்சேரி தலா 2வெற்றி, தோல்விகளுடன் 12 புள்ளிகளை பெற்று டி பிரிவில் 3வது இடத்தை பிடித்துள்ளது.இன்று கோவாவில் தொடங்கும் ஆட்டத்தில் கோவா-தமிழ்நாடு அணிகளும், கட்டாக்கில் ஆரம்பிக்கும் ஆட்டத்தில் ஒடிஷா-புதுச்சேரி அணிகளும் களம் காண உள்ளன.

* இன்று முதல் ஒருநாள் ஆட்டம்
ஆஸ்திரேலியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது. அடுத்து இந்த 2 அணிகளுக்கு இடையிலான 3 ஆட்டங்களை கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது. முதல் ஆட்டம் இன்று பகல்/இரவு ஆட்டமாக மெல்போர்னில் நடைபெற உள்ளது. தொடர்ந்து 2வது ஆட்டம் பிப்.4ம் தேதி சிட்னியிலும், 3வது ஆட்டம் பிப்.6ம் தேதி கான்பெராவிலும் நடக்கும். இந்த தொடரில் ஸ்டீவன் ஸ்மித் தலைமையில் ஆஸி, ஷாய் ஹோப் தலைமையில் வெ.இ அணிகள் களமிறங்க உள்ளன.

The post சில்லிபாயிண்ட்… appeared first on Dinakaran.

Tags : Prithvi Shah ,England ,Sillypoint… ,Dinakaran ,
× RELATED விசா நடைமுறை விதி மீறல்; இங்கிலாந்தில் 12 இந்தியர்கள் கைது