×

லாவண்யா ஜூவல்லரியின் ரூ.34.11 கோடி சொத்து அமலாக்கத்துறை முடக்கம்

கோவை: கோவை ஒப்பணக்கார வீதியில் செயல்பட்டு வரும் லாவண்யா ஜூவல்லரி நிறுவனம் ஏலச்சீட்டு உள்ளிட்ட பல்வேறு வகைகளில் மக்களின் பணத்தை வாங்கி மோசடி நடந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து கடந்த 2017ம் ஆண்டு இந்த நகைக்கடை மீது சிபிஐ மோசடி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது. அதில், ரூ.65 கோடிக்கு மோசடி நடந்ததாகவும், பல்வேறு மோசடிகளில் நகைக்கடை மற்றும் அதன் சகோதர நிறுவனங்கள் ஈடுபட்டிருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து நகைக்கடைக்கு சொந்தமான சொத்துக்களை முடக்கி இருந்தது. இந்நிலையில் இந்த நகைக்கடை மோசடி தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தி சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கு பதிவு செய்து, நகைக்கடையின் பெயரில் இருந்த ரூ.34.11 கோடி மதிப்பிலான அசையா சொத்துக்களை முடக்கி உள்ளது. இதில் சென்னை, கோவையில் உள்ள ஒரு குடியிருப்பு இடம், 4 விளை நிலம், ஒரு அடுக்குமாடி வீடு ஆகிய சொத்துக்கள் அமலாக்கத்துறை முடக்கி உள்ளது.

 

The post லாவண்யா ஜூவல்லரியின் ரூ.34.11 கோடி சொத்து அமலாக்கத்துறை முடக்கம் appeared first on Dinakaran.

Tags : Enforcement Directorate ,Lavanya Jewellery ,Coimbatore ,Lavanya Jewelery Company ,Oppanakkara Road ,CBI ,
× RELATED மணல் முறைகேடு வழக்கில் 5 மாவட்ட...