×

சென்னையில் இருந்து அயோத்திக்கு தினமும் நேரடி விமான சேவை தொடக்கம்: ஒருவருக்கு ரூ.5,810 கட்டணம்

சென்னை: சென்னை – அயோத்தி – சென்னை இடையே தினசரி நேரடி விமான சேவை நேற்று முதல் தொடங்கியது. நபர் ஒன்றுக்கு குறைந்தபட்ச டிக்கெட் கட்டணம் ரூ.5,810 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உத்தரபிரதேசம் மாநிலம், அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டு, கடந்த 22ம் தேதி குடமுழுக்கு நடந்தது. இதையடுத்து தமிழ்நாட்டில் இருந்து ஏராளமான பக்தர்கள், அயோத்திக்கு விமானத்தில் சென்றனர். ஆனால் அவர்களுக்கு சென்னையில் இருந்து அயோத்திக்கு நேரடி விமான சேவை இல்லாததால், லக்னோ சென்று அங்கிருந்து அயோத்தி சென்றனர். இந்நிலையில், தனியார் பயணிகள் விமான நிறுவனம், அயோத்தி செல்லும் பக்தர்கள் வசதிக்காக சென்னையில் இருந்து அயோத்திக்கு நேரடி விமான சேவையை தொடங்க முடிவு செய்தது.

அதன்படி சென்னை – அயோத்தி – சென்னை இடையே தினசரி நேரடி விமான சேவை நேற்று முதல் தொடங்கியது. இந்த விமானம் சென்னை உள்நாட்டு விமான நிலையம் டெர்மினல் 1ல் இருந்து தினமும் பகல் 12.50 மணிக்கு புறப்பட்டு பிற்பகல் 3.25 மணிக்கு அயோத்தி சென்றடைகிறது. மீண்டும் பிற்பகல் 4.10 மணிக்கு அயோத்தியில் இருந்து புறப்பட்டு மாலை 6.40 மணிக்கு சென்னை உள்நாட்டு விமான நிலையம் வந்தடைகிறது. இந்த விமானத்தில் பயணிக்க நபர் ஒன்றுக்கு குறைந்தபட்ச டிக்கெட் கட்டணம் ரூ.5,810 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வரிகள் தனியாக வசூலிக்கப்படுகிறது. ஆனால் பயணிகள் எண்ணிக்கை, டிக்கெட் முன்பதிவு செய்யப்படும் நேரம் ஆகியவற்றுக்கு தகுந்தாற்போல், குறைந்தபட்ச டிக்கெட் கட்டணங்கள் மாறுபடுகின்றன.

 

The post சென்னையில் இருந்து அயோத்திக்கு தினமும் நேரடி விமான சேவை தொடக்கம்: ஒருவருக்கு ரூ.5,810 கட்டணம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Ayodhya ,Ram Temple ,Ayodhya, Uttar Pradesh ,
× RELATED ராம நவமி நாளில் அயோத்தி ராமரின்...