×

வரகு அரிசி சாம்பார்சாதம்

தேவையானவை

வரகு அரிசி – 1 கப்
துவரம் பருப்பு – 30 கிராம்
தண்ணீர் – 3 கப்
சின்ன வெங்காயம்- 100
கிராம்
நல்லெண்ணெய்- தேவைக்
கேற்ப
காய்கறிகள் – 5 வகை
தக்காளி – 3
சீரகம் -1 தேக்கரண்டி
கறிவேப்பிலை- 1 ஈர்க்கு
பச்சை மிளகாய் -1
பெருங்காயம் – 2 சிட்டிகை
மஞ்சள் தூள்- 1 சிட்டிகை
உப்பு – தேவைக்கேற்ப
சாம்பார் மசாலாப் பொடி – 2 தேக்கரண்டி.

செய்முறை:

வரகரிசியையும், துவரம்பருப்பையும் தனித்தனியே 30 நிமிடங்கள் ஊற வைத்துக் கொள்ளவும்.கொத்துமல்லி தழை, காய்கறிகள், தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பின்னர், குக்கரில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். அதில் கடுகு, சீரகம் தாளித்து பின் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை வதக்கவும். அடுத்து தக்காளியுடன், மஞ்சள் பொடி, பெருங்காயம் மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து சில நிமிடங்கள் வதக்கவும். பின்னர், நறுக்கி வைத்துள்ள அனைத்து காய்கறிகள் சேர்த்து வதக்கவும். அத்துடன் சாம்பார் மசாலாப் பொடி சேர்த்து வதக்கவும். பின்னர், வரகரிசி, துவரம் பருப்பு ஆகியவற்றை குக்கரில் சேர்த்து நீரை ஊற்றி வேக வைக்கவும். முதல் விசில் வந்த பிறகு, தீயை குறைத்து 8 நிமிடங்கள் காத்திருந்து பின் அடுப்பை அணைக்கவும். சுவையான வரகு சாம்பார் சாதம் தயார். பலன்கள்: வரகு அரிசியை தொடர்ந்து சமைத்து உண்டு வர, சர்க்கரை அளவைக் குறைக்கிறது. மூட்டுவலியைக் குறைக்க உதவுகிறது. கல்லீரலின் செயல்பாடுகளைத் தூண்டுகிறது. கண் நரம்பு நோய்களைத் தடுக்கும் குணம் வரகுக்கு உண்டு. நிணநீர் சுரப்பிகளைச் சீராக்கும். மாதவிடாய் கோளாறு கொண்ட பெண்கள் வரகை தொடர்ந்து சமைத்து சாப்பிட்டு வர, மாதவிடாய் கோளாறுகள் நீங்கும்.

The post வரகு அரிசி சாம்பார்சாதம் appeared first on Dinakaran.

Tags :
× RELATED செட்டிநாடு நண்டு குழம்பு