×

சாதி, மதமற்றவர் என்ற சான்றிதழ் வழங்கிட வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு அதிகாரம் இல்லை : சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை : சாதி மதமற்றவர் சான்றிதழை வருவாய்த்துறை அதிகாரிகள் வழங்க முடியாது என்றும் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு அதற்கான அதிகாரம் இல்லை என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருப்பத்தூரை சேர்ந்த சந்தோஷ் என்பவர் தனக்கு சாதி, மதம் அற்றவர் என சான்றிதழ் வழங்க வருவாய் துறைக்கு உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையுடன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியன், “சாதி, மதமற்றவர் என்று சான்றிதழ் வழங்கிட வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு அதிகாரம் இல்லை. வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு அதிகாரம் இல்லாத நிலையில் அவர்களுக்கு உத்தரவிட முடியாது.

அரசின் பட்டியலில் உள்ள குறிப்பிடப்பட்டுள்ள சான்றிதழ்களை மட்டுமே வழங்க அவர்களுக்கு அதிகாரம் உள்ளது. சாதி மதமற்றவர் என்று சான்றிதழ் கேட்டுள்ள மனுதாரரின் விருப்பம் பாராட்டுக்குரியது. இத்தகைய சான்றிதழ் வழங்குவது சொத்து, வாரிசுரிமை, இடஒதுக்கீடு ஆகியவற்றில் தனிப்பட்ட சட்டங்களை பயன்படுத்தும் போது கடும் விளைவுகளை ஏற்படுத்தும், எதிர்கால சந்ததியினரையும் பாதிக்கும்.கல்வி நிலைய விண்ணப்பங்களில் சாதி, மதம் தொடர்பான இடத்தை பூர்த்தி செய்ய விரும்பாதவர்கள் அந்த பகுதிகளை அப்படியே விட்டுவிடலாம். எனவே மனுவை தள்ளுபடி செய்கிறோம்,”இவ்வாறு தெரிவித்தார்.

The post சாதி, மதமற்றவர் என்ற சான்றிதழ் வழங்கிட வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு அதிகாரம் இல்லை : சென்னை உயர்நீதிமன்றம் appeared first on Dinakaran.

Tags : Madras High Court ,CHENNAI ,Santhosh ,Tiruppattur ,Dinakaran ,
× RELATED விவிபேட் சீட்டு வழக்கு: விசாரணைக்கு ஏற்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு