×

ராமர் கோயில் செல்லும் பக்தர்கள் வசதிக்காக சென்னையில் இருந்து அயோத்திக்கு இன்று முதல் நேரடி விமான சேவை தொடக்கம்.!

சென்னை: ராமர் கோயில் செல்லும் பக்தர்கள் வசதிக்காக, சென்னையில் இருந்து அயோத்திக்கு இன்று முதல் நேரடி விமான சேவை வழங்கப்படுகிறது. ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் சென்னை அயோத்தி – சென்னை, தினசரி விமான சேவையை தொடங்குகிறது. உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் பிரதிஷ்டை விழா கடந்த 22-ந்தேதி கோலாகலமாக நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து அயோத்திக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது.

குறிப்பாக தென்னிந்தியாவில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ராமர் கோவிலுக்கு தினசரி செல்கின்றனர். இந்நிலையில் சென்னை-அயோத்தி இடையேயான தினசரி விமான சேவையை ஒன்றிய விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, இன்று தொடங்கி வைக்கிறார். இதன்படி சென்னை, மும்பை, பெங்களூர், ஆமதாபாத், பாட்னா, மும்பை, பெங்களூரு, ஜெய்ப்பூர் நகரங்களில் இருந்து அயோத்திக்கு தினசரி விமான சேவை தொடக்கங்கப்பட உள்ளது.

முன்னதாக ராமர் கோவில் திறப்பு விழாவிற்காக அந்த நகரில் புதிய விமான நிலையம் ஒன்று அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. சென்னையில் இருந்து பகல் 12.40 மணிக்கு புறப்படும் விமானம், மாலை 3.15 மணிக்கு அயோத்தி சென்றடையும். அதே விமானம் மாலை 4 மணிக்கு அயோத்தியில் இருந்து புறப்பட்டு மாலை 6.20 மணிக்கு சென்னை வந்து சேரும். விமானத்தில் பயணம் செய்வதற்கு டிக்கெட் கட்டணமாக ரூ.6,499 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. போயிங் 737-8 வகையை சேர்ந்த விமானம் என்பதால் இதில் ஒரே நேரத்தில் 180-க்கும் அதிகமானோர் பயணிக்கலாம்.

The post ராமர் கோயில் செல்லும் பக்தர்கள் வசதிக்காக சென்னையில் இருந்து அயோத்திக்கு இன்று முதல் நேரடி விமான சேவை தொடக்கம்.! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Ayodhya ,Ram temple ,SpiceJet ,Ayodhya, Uttar Pradesh ,
× RELATED ராம நவமி நாளில் அயோத்தி ராமரின்...