×

சென்னையில் இருந்து அயோத்திக்கு இன்று முதல் நேரடி விமான சேவை

சென்னை: ராமர் கோயில் செல்லும் பக்தர்கள் வசதிக்காக, சென்னையில் இருந்து அயோத்திக்கு இன்று முதல் நேரடி விமான சேவை வழங்கப்படுகிறது. ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் சென்னை அயோத்தி – சென்னை, தினசரி விமான சேவையை தொடங்குகிறது. அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழா ஜன.22-ம் தேதி நடைபெற்றது. சென்னையில் இருந்து பகல் 12.40 மணிக்கு புறப்படும் விமானம், மாலை 3.15 மணிக்கு அயோத்தி சென்றடையும். அதே விமானம் மாலை 4 மணிக்கு அயோத்தியில் இருந்து புறப்பட்டு மாலை 6.20 மணிக்கு சென்னை வந்து சேரும். விமானத்தில் பயணம் செய்வதற்கு டிக்கெட் கட்டணமாக ரூ.6,499 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. போயிங் 737-8 வகையை சேர்ந்த விமானம் என்பதால் இதில் ஒரே நேரத்தில் 180-க்கும் அதிகமானோர் பயணிக்கலாம்.

The post சென்னையில் இருந்து அயோத்திக்கு இன்று முதல் நேரடி விமான சேவை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Ayodhya ,Ram Temple ,SpiceJet ,Ayodhya- ,
× RELATED ராம நவமி நாளில் அயோத்தி ராமரின்...