×

திருப்புத்தூர் அருகே சேதமடைந்த சாலையை சீரமைக்க கோரிக்கை

திருப்புத்தூர்: திருப்புத்தூர் அருகே, சேதமடைந்த நிலையில் உள்ள சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூர் அருகே 3 கி.மீ தூரத்தில் காரையூர் உள்ளது. திருப்புத்தூரில் இருந்து மதுரைக்கு செல்லும் மெயின் ரோட்டில் இருந்து திருவுடையார்பட்டி வழியாக சென்றால் காரையூர் விலக்குப்பகுதியில் திண்டுக்கல் செல்லும் மெயின் ரோட்டுடன் இணையும் சாலை உள்ளது. இந்த சாலை பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது.

இந்த சாலை திருவுடையார்பட்டி, ரணசிங்கபுரம், காரையூர் ஆகிய ஊராட்சிகளுக்குட்பட்ட முக்கிய பிரதான சாலையாக உள்ளது. இதனால் இப்பகுதியை சேர்ந்த கிராமமக்கள் இச்சாலையை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் உரிய பராமரிப்பில்லாததால், இந்த சாலை முற்றிலும் சேதமடைந்து குண்டும், குழியுமாக, கற்கள் பெயர்ந்து காணப்படுகிறது. இதனால் இப்பகுதிமக்கள் மற்றும் வாகன ஓட்டுனர்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுனர்கள் நலன் கருதி, இந்த சாலையை உடனடியாக சீரமைக்க செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post திருப்புத்தூர் அருகே சேதமடைந்த சாலையை சீரமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Tiruputhur ,Karaiyur ,Sivagangai district ,Thiruvudayarpatti ,Madurai ,Dinakaran ,
× RELATED திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு