×

விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 20 ஆயிரம் நெல் மூட்டைகளுடன் 3நாளாக காத்துக் கிடக்கும் விவசாயிகள்

மங்கலம்பேட்டை: கடலூர் மாவட்டத்தில் சுமார் 3 லட்சம் ஏக்கர் பரப்பளவில் நடப்பாண்டிற்கான சம்பா நெல் சாகுபடி செய்யப்பட்டு, தற்போது அறுவடை பணி தீவிரமாக நடந்து வருகிறது. அவ்வாறு விவசாயிகள் அறுவடை செய்த நெல் மூட்டைகளை விற்பனை செய்வதற்காக அரசின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள ஒழங்குமுறை விற்பனைக்கூடங்களுக்கு கொண்டு செல்வது வழக்கம். அதன்படி விருத்தாசலம் அரசு ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்குவிவசாயிகள் தங்கள் விளை பொருட்கள் கொண்டு வந்து விற்பனை செய்து செல்கிறார்கள்.

விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்திற்கு நாளொன்றுக்கு சராசரியாக 8000 மூட்டைகளுக்கு மேல் நெல் வரத்து இருப்பதால் சுமார் 20,000 நெல் மூட்டைகளுடன் 3 நாட்களுக்கு மேலாக விவசாயிகள் காத்துக் கிடக்கின்றனர். இதனால் அங்கு உள்ள அனைத்து குடோன்களும் நிரம்பி, வெட்ட வெளியில் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகளை அடுக்கி வைத்துள்ளனர். வெயிலிலும், பனியிலும் போதுமான அடிப்படை வசதிகள் இல்லாமல், மிகுந்த சிரமத்துக்கு ஆளாவதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

The post விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 20 ஆயிரம் நெல் மூட்டைகளுடன் 3நாளாக காத்துக் கிடக்கும் விவசாயிகள் appeared first on Dinakaran.

Tags : Vridthachalam ,Cuddalore district ,
× RELATED லாரி மோதி வாலிபர் பலி