×

ஐசிசி ஆடவர் டெஸ்ட் பந்துவீச்சாளர்களுக்கான பட்டியலில் 4வது இடத்திற்கு முன்னேறினார் பும்ரா: முதலிடத்தில் நீடிக்கும் அஸ்வின்

துபாய்: ஐசிசி தரவரிசையில் ரவிச்சந்திரன் அஸ்வின் நம்பர் 1 இடத்தைத் தக்க வைத்துக் கொண்டார். ஜஸ்பிரித் பும்ரா 4வது இடத்திற்கு முன்னேறினார்.

ஐசிசி பந்துவீச்சு தரவரிசையில், மூத்த வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் 853 புள்ளிகளுடன் முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்டார். இதற்கிடையில், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் ஜஸ்பிரித் பும்ரா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 825 புள்ளிகளுடன் 4வது இடத்திற்கு முன்னேறினார். முதல் 10 இடங்களில் இடம்பெற்றுள்ள மற்றொரு இந்திய பந்துவீச்சாளர் இடது கை சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா 754 புள்ளிகளுடன் 6வது இடத்தைப் பிடித்துள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 6 விக்கெட்டுகளை வீழ்த்திய அஷ்வின், 853 ரேட்டிங் புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். அதே நேரத்தில் வேகப்பந்து வீச்சாளர் பும்ராவும் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி 6 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் காரணமாக 1 புள்ளி உயர்ந்து 4வது இடத்தை பிடித்தார்.

டெஸ்ட் ஆல்-ரவுண்டர் தரவரிசையில் ஜடேஜா 425 புள்ளிகளுடன் முதலிடத்திலும், ரவிச்சந்திரன் அஸ்வின் 328 புள்ளிகளுடன் 2வது இடத்திலும், அக்சர் படேல் 290 புள்ளிகளுடன் 6வது இடத்திலும் உள்ளனர். டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான பட்டியலில் 864 புள்ளிகளுடன் நியூசிலாந்து அணி வீரர் கேன் வில்லியம்சன் முதலிடத்தில் நீடிக்கிறார்.

1 புள்ளி முன்னேற்றம் கண்டு 767 புள்ளிகளுடன் இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி 6வது இடத்தில் உள்ளார். மேலும் இந்திய அணி வீரர்களான ரோஹித் ஷர்மா 12வது இடத்திலும், ரிஷப் பண்ட் 13வது இடத்திலும் உள்ளனர்.

The post ஐசிசி ஆடவர் டெஸ்ட் பந்துவீச்சாளர்களுக்கான பட்டியலில் 4வது இடத்திற்கு முன்னேறினார் பும்ரா: முதலிடத்தில் நீடிக்கும் அஸ்வின் appeared first on Dinakaran.

Tags : Bumrah ,ICC Men ,Ashwin ,Dubai ,Ravichandran Ashwin ,ICC ,Jasprit Bumrah ,ICC Bowling ,Dinakaran ,
× RELATED பும்ரா அபார பந்துவீச்சு மும்பை அணிக்கு 169 ரன் இலக்கு