×

தாம்பரம்-நாகர்கோவில் வாராந்திர சிறப்பு ரயில் மேலும் 2 மாதங்களுக்கு நீட்டிப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய ரயில்களில் எப்போதும் கூட்டம் அதிகமாக இருப்பதால் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.அதன்படி தாம்பரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் மேலும் 2 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கையில்: பயணிகள் கூட்ட நெரிசலின்றி பயணம் செய்ய தென்மாவட்டங்களுக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில்கள் மேலும் 2 மாதங்களுக்கு நீட்டிக்கப்படுகிறது.

அதன்படி, நாகர்கோவிலில் இருந்து தாம்பரத்திற்கு ஞாயிற்றுக்கிழமைதோறும் மாலை 4.35 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.10 மணிக்கு தாம்பரம் வந்து சேருகிறது. இந்த ரயில் பிப்ரவரி 4ம்தேதி 11, 18, 25 மற்றும் மார்ச் 3, 10, 17, 24, 31 ஆகிய தேதிகளில் இயக்கப்படும். இதே போல தாம்பரத்தில் இருந்து திங்கட்கிழமை காலை 8.5 மணிக்கு புறப்பட்டு அன்று இரவு 8.55 மணிக்கு நாகர்கோவில் சென்றடைகிறது. இந்த சிறப்பு ரயில் பிப்ரவரி 5, 12, 19, 26 மற்றும் மார்ச் 4, 11, 18, 25 ஏப்ரல் 1ம் தேதிகளில் இயக்கப்பட உள்ளது.

திருநெல்வேலி-மேட்டுப்பாளையம் இடையே இயக்கப்படும் சிறப்பு ரயிலும் பிப்ரவரி 4, 11, 18, 25 மற்றும் மார்ச் 3, 10, 17, 24, 31 ஆகிய தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி சிறப்பு ரயில் பிப்ரவரி 5, 12, 19, 26 மற்றும் மார்ச் 4, 11, 18, 25, ஏப்ரல் 1 ஆகிய தேதிகளில் இயக்கப்படும். இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியுள்ளது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

The post தாம்பரம்-நாகர்கோவில் வாராந்திர சிறப்பு ரயில் மேலும் 2 மாதங்களுக்கு நீட்டிப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Tambaram ,Nagarkov ,Southern Railway ,CHENNAI ,Nagercoil ,Tambaram-Nagarkoil ,Dinakaran ,
× RELATED கடற்கரை – தாம்பரம் இடையே 15 ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு