×

அரசு மருத்துவமனையில் முதல் முறையாக குளிரூட்டப்பட்ட 70 கட்டண தனி அறைகள் திறப்பு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெருமிதம்

சென்னை: சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனையில் ரூ.30.5 கோடி மதிப்பீட்டில் அதிநவீன உபகரணங்களுடன் 10 உயர்சிறப்பு அறுவை அரங்கம், 50 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சை பிரிவு மற்றும் 70 குளிரூட்டப்பட்ட தனி அறைகள் ஆகியவற்றினை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று திறந்து வைத்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த ஆண்டு ஜூன் மாதம் கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனை திறக்கப்பட்டது. இது மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. நவீன வசதிகளுடன் குளிரூட்டப்பட்ட 70 கட்டண தனி அறைகள் திறக்கப்பட்டு உள்ளது.

இந்த அறையில் குளிர்சாதன வசதி, நவீன் தீவிர சிகிச்சை பிரிவு படுக்கை, ஆக்ஸிஜன் மற்றும் மானிட்டர் உபகரணம் உள்ளிட்ட வசதிகள் உள்ளது. இந்த கட்டண வார்டுகளுக்கு தனியாக செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் 24 மணிநேரமும் பணியில் இருப்பார்கள்.

இதற்கு கட்டணம் தனி அறைக்கு ரூ.1,200, டீலக்ஸ் அறைக்கு ரூ.2000 மற்றும் சூப்பர் டீலக்ஸ் அறைக்கு ரூ.3000 என வசூலிக்கப்படுகிறது. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு தற்போது தான் சுற்றுசூழல் அனுமதிக்கு ஒன்றிய அரசு கோரி உள்ளது. தேர்தல் வரும் நேரத்தில் இப்படி செய்து வருகின்றனர்.

The post அரசு மருத்துவமனையில் முதல் முறையாக குளிரூட்டப்பட்ட 70 கட்டண தனி அறைகள் திறப்பு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெருமிதம் appeared first on Dinakaran.

Tags : Minister ,Ma. Subramanian Pride ,Chennai ,Artist Century ,Hospital ,Kindi, Chennai ,Ma Subramanian Pride ,
× RELATED அமைதிப்பூங்காவான தமிழகம் என மீண்டும்...