×

மோடி ஆட்சியில் தினமும் 30 விவசாயிகள் தற்கொலை: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

பாட்னா: பாஜகவின் ஆட்சியில் நாளொன்றுக்கு 30 விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கின்றனர் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். இந்திய ஒற்றுமை நீதி நடைப்பயணத்தில் இருக்கும் ராகுல் காந்தி பீகாரில் நூற்றுக்கணக்கான விவசாயிகளைச் சந்தித்து கலந்துரையாடினார்.

இதுகுறித்து அவரது தனது பக்கத்தில், ‘கடந்த 2014ம் ஆண்டைவிட விவசாயிகளின் கடன் 60% அதிகரித்துள்ள நிலையில், மோடி அரசு கடந்த 10 ஆண்டுகளில் ரூ. 7.5 லட்சம் கோடி மதிப்பிலான தொழிலதிபர்களின் கடனைத் தள்ளுபடி செய்துள்ளது.

பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் விவசாயிகளின் பங்கான ரூ.2700 கோடியை நிறுத்தி வைத்துள்ள தனியார் காப்பீட்டு நிறுவனங்கள், ரூ. 40,000 கோடி லாபம் பார்க்கின்றன. முறையான குறைந்தபட்ச ஆதரவு விலை இல்லாததால் விலையுயர்ந்த உரங்கள், விலையுயர்ந்த விதைகள், விலையுர்ந்த நீர் பாசனம் ஆகியவற்றைப் பெறுவதில் விவசாயிகளுக்கு பெரும் சிக்கல் உள்ளது.

விவசாய செலவுகளைக் குறைப்பதும், விவசாயிகளின் பயிர்களுக்கு சரியான விலையை நிர்ணயிப்பதுவுமே காங்கிரசின் குறிக்கோள்’ என்று தெரிவித்துள்ளார்.

The post மோடி ஆட்சியில் தினமும் 30 விவசாயிகள் தற்கொலை: ராகுல் காந்தி குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Modi ,Rahul Gandhi ,PATNA ,FORMER ,BAJAKA ,Indian Unity Justice Walk ,Bihar ,Dinakaran ,
× RELATED விரக்தியடைந்து, ஏமாற்றமடைந்துள்ள...