×

சின்னவெங்காயம் விலை கடும் வீழ்ச்சி.. கிலோ ரூ.10க்கு விற்பனை செய்யப்படுவதால் விவசாயிகள் வேதனை..!!

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் சின்னவெங்காயம் விலை கடும் வீழ்ச்சியடைந்துள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். சமையலில் ருசியை கூட்டவும், உடலுக்கு சத்து மற்றும் குளிர்ச்சியை கொடுக்ககூடிய முக்கிய உணவு பொருளாக சின்ன வெங்காயம் திகழ்கிறது. வெண்ணந்தூர் பகுதிகளில் சில மாதங்களுக்கு முன் சுமார் 1,000 ஏக்கரில் சின்னவெங்காயம் பயிரிடப்பட்டது. சாகுபடி செய்த சமயத்தில் சின்னவெங்காயம் விலை கிலோவுக்கு ரூ.30 வரை விற்கப்பட்டது. தற்போது அவை அறுவடைக்கு தயாரானதால் சின்னவெங்காயத்தை விவசாயிகள் அறுவடை செய்து வருகிறார்கள். ஒரு கிலோ தரமான சின்ன வெங்காயம் ரூ.10க்கு மட்டுமே விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

உரிய விலை கிடைக்காததால் வெங்காயம் பயிரிட்டிருந்த விவசாயிகள் நிலத்திலேயே அதை அழிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்துள்ளனர். ஒரு ஏக்கரில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்ய விதை, நடவு, உரமேலாண்மை, களை எடுத்தல், அறுவடை என பயிரிடப்பட்டது முதல் அறுவடை வரை ஏக்கருக்கு பல லட்ச ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர். எங்கள் உழைப்பு மற்றும் பாதுகாப்பை கணக்கில் கொண்டால் இந்த கொள்முதல் விலை மிகவும் குறைவு தான். தற்போது சின்ன வெங்காயம் கிலோ ரூ.10க்கு விற்பனை செய்யப்படுவதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். எனவே விவசாயிகளை பாதுகாக்க, அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.

The post சின்னவெங்காயம் விலை கடும் வீழ்ச்சி.. கிலோ ரூ.10க்கு விற்பனை செய்யப்படுவதால் விவசாயிகள் வேதனை..!! appeared first on Dinakaran.

Tags : Namakkal ,Rasipuram ,Namakkal district ,Vennandur ,
× RELATED இறைச்சி கடைகளில் நன்கு சமைத்த...