×

ஒரு நிமிடத்தில் இந்திய வரைபட வடிவில் நின்று, சிறுதானியத்தை விதைத்து உலக சாதனை!

சென்னை: உலக சிறுதானிய ஆண்டை முன்னிட்டு 5000 பள்ளி மாணவ மாணவிகள் ஒரு நிமிடத்தில் இந்திய வரைபடத்தின் வடிவில் நின்று சிறுதானியத்தை விதைத்து உலக சாதனை நிகழ்த்தி ஆசியா புக் ஆஃப் ரெகார்ட் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளனர். BODHI CHARITABLE TRUST மற்றும் KURUKSHETRA IAS ACADEMY – இணைந்து உலக சிறுதானிய ஆண்டை முன்னிட்டு அறம் விதைப்போம் என்ற தலைப்பில் உலக சாதனை நிகழ்வு நடத்தப்பட்டது.

முகப்பேரில் உள்ள தனியார் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 25க்கும் மேற்பட்ட பள்ளியில் இருந்து சுமார் 5000 மேற்பட்ட மாணவ மாணவிகள் ஒரு நிமிடத்தில் இந்திய வரைபடத்தின் வடிவில் நின்று சிறுதானியம் விதைத்து உலக சாதனை நிகழ்த்தி ஆசிய புக் ஆப் ரெக்கார்ட் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளனர். இந்த நிகழ்ச்சியயை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும் திருச்சி பாராளுமன்ற உறுப்பினருமான திருநாவுக்கரசு எம்பி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

நிகழ்ச்சியில்  தமிழ்நாடு சட்ட ஆணையரின் உறுப்பினர் தீனதயாளன் ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வாசுகி உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றனர்.

The post ஒரு நிமிடத்தில் இந்திய வரைபட வடிவில் நின்று, சிறுதானியத்தை விதைத்து உலக சாதனை! appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,International Year of Small Grains ,India ,
× RELATED 4 விமான நிலையங்களுக்கு மிரட்டல் சென்னை...