×

இபிஎஸ் தலைமையிலான அதிமுகவுடன் இணைந்து பணியாற்ற முடியாது: டிடிவி தினகரன் பேட்டி

மதுரை: ஒருபோதும் இபிஎஸ் தலைமையிலான அதிமுகவுடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பில்லை என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அனைத்து கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு செய்வது குறித்து தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகின்றன. இதனால் தமிழ்நாட்டில் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது; தேர்தல் வெற்றி தோல்வியை கடந்து அரசியல் ரீதியாக நானும் ஓபிஎஸ்ஸும் சேர்ந்து பயணிக்க வேண்டும் என்று முடிவெடுத்திருக்கிறோம். பொறுத்திருந்து பாருங்கள். இது எந்த அளவுக்கு பலன் தரும் என்பதை தமிழ்நாட்டு மக்கள் முடிவு செய்வார்கள். நாங்கள் சில கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். கூட்டணி உறுதியான பிறகு அதை நாங்கள் அறிவிக்கிறோம். தேர்தலில் பிரதமரை தேர்வு செய்யும் கூட்டணியில் அமமுக இடம் பெறும் அல்லது தனித்து போட்டியிடும்.

ஒருபோதும் இபிஎஸ் தலைமையிலான அதிமுகவுடன் இணைந்து பணியாற்ற முடியாது. தேர்தலில் போட்டியிட எனக்கு விருப்பம் இல்லை. ஆனால் நிர்வாகிகள் கோரிக்கை வைப்பதால் போட்டியிடுவது தொடர்பாக ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் இவ்வாறு கூறினார்.

The post இபிஎஸ் தலைமையிலான அதிமுகவுடன் இணைந்து பணியாற்ற முடியாது: டிடிவி தினகரன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : EPS ,AIADMK ,DTV ,Madurai ,General Secretary ,TTV Dhinakaran ,Dinakaran ,
× RELATED இபிஎஸ் இருக்கும் வரை அதிமுக ஒன்றிணைய வாய்ப்பில்லை: டிடிவி தினகரன் பேட்டி