×

சேலம் பெரியார் பல்கலை. நிதித்துறை அலுவலகத்தில் உள்ளாட்சி நிதி தணிக்கை சிறப்பு ஆய்வு குழுவினர் 8வது நாளாக ஆய்வு..!!

சேலம்: சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நிதித்துறை அலுவலகத்தில் உள்ளாட்சி நிதி தணிக்கை சிறப்பு ஆய்வு குழுவினர் 8வது நாளாக ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். பெரியார் பல்கலைக்கழகத்தில் துணை வேந்தர் ஜெகநாதன், பதிவாளர் தங்கவேல் உள்ளிட்ட 4 பேர் பூட்டர் பவுண்டேசன் நிறுவனத்தை பல்கலைக்கழகத்தில் துவங்கினர். லாப நோக்குடன் ஓய்வுக்கு பிறகும் வருவாய் ஈட்டும் வகையில் துவங்கியதாக புகார் எழுந்தது. மேலும், புகார் தெரிவித்த பல்கலைக்கழக தொழிலாளர் சங்க சட்ட ஆலோசகர் இளங்கோவனை ஜாதிய ரீதியாக திட்டியது என 8 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து துணை வேந்தர் ஜெகநாதன் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.

இதனிடையே தன் மீதான வழக்கை ரத்து செய்யகோரி துணை வேந்தர் உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதை விசாரித்த நீதிமன்றம் நான்கு வாரங்களுக்கு விசாரணைக்கு தடை விதித்துள்ளது. மேலும், பெரியார் பாலைக்கழகத்துக்கு ஒதுக்கிய நிதியில் உபகரணங்கள், மென்பொருள் உள்ளிட்டவை கொள்முதல் செய்ததில் முறைகேடு நடந்துள்ளதாக ஆசிரியர் சங்ககத்தினர் தொடர்ந்து குற்றச்சாட்டி வந்ததால், மாநில உள்ளாட்சி நிதி தணிக்கை குழுவினர் கடந்த 18ம் தேதி முதல் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

மாநில உள்ளாட்சி நிதி தணிக்கை குழுவின் துணை இயக்குனர் நீலாவதி தலைமையில் 8 பேர் கொண்ட குழுவினர் விடுமுறை நாட்களை தவிர தொடர்ந்து ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இன்று 8வது நாளாக ஆய்வு பணியை மேற்கொண்டு வருகின்றனர். துணைவேந்தராக ஜெகநாதன் பதவியேற்ற பின், என்னென்ன பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டன என்பது குறித்தும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். வாங்கப்பட்ட பொருட்களுக்கு ரசீதுகள் முறையாக உள்ளனவா, மென்பொருள் வாங்கியதில் ஊழல் நடைபெற்றுள்ளதாக எனவும் விசாரணை நடைபெற்று வருகிறது.

The post சேலம் பெரியார் பல்கலை. நிதித்துறை அலுவலகத்தில் உள்ளாட்சி நிதி தணிக்கை சிறப்பு ஆய்வு குழுவினர் 8வது நாளாக ஆய்வு..!! appeared first on Dinakaran.

Tags : Salem Periyar University ,Salem ,Department ,Periyar University ,Jaganathan ,Thangavel ,Booter Foundation ,Dinakaran ,
× RELATED சேலம் பெரியார் பல்கலை. துணைவேந்தர்...