×

அரக்கோணம் அருகே டாஸ்மாக் ஊழியரை கத்தியை காட்டி மிரட்டி ரூ.42,000 பறிப்பு..!!

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே டாஸ்மாக் ஊழியர் சிவகுமாரை கத்தியை காட்டி மிரட்டி ரூ.42,000 பறிக்கப்பட்டுள்ளது. புன்னைப்பகுதியில் செயல்பட்டுவரக்கூடிய டாஸ்மாக் கடையில் பீர் கேட்டு மர்மநபர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். பீர் பாட்டில் கேட்டு தர மறுத்ததால் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி சிவகுமாரிடம் இருந்து ரூ.42,000 பறித்துள்ளனர். டாஸ்மாக் ஊழியர் சிவகுமார் அளித்த புகாரை அடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post அரக்கோணம் அருகே டாஸ்மாக் ஊழியரை கத்தியை காட்டி மிரட்டி ரூ.42,000 பறிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Tasmak ,Arakkonam ,Ranipettai ,Shivakumar ,Ranipettai district ,Dinakaran ,
× RELATED மக்களவை தேர்தலையொட்டி டாஸ்மாக் கடைகளில் கண்காணிப்பு