×

மகாத்மா காந்தி நினைவு நாள் காங்கிரஸ் கட்சியினர் அஞ்சலி

தில்லைநகர்: திருச்சி காங்கிரஸ் கட்சியினர் சார்பாக அருணாச்சல மன்றத்தில் தேசப்பிதா மகாத்மா காந்தியின் 76ம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. மகாத்மா காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி காங்கிரஸ் கட்சி அலுவலகமான அருணாச்சலம் மன்றம் அருகிலுள்ள மகாத்மா காந்தி சிலைக்கு திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் ரெக்ஸ் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பினை வாசித்தார். இந்நிகழ்ச்சியில் தெற்கு மாவட்ட தலைவர் கோவிந்தராஜ், முன்னாள் மாவட்ட தலைவர் ஜெரோம் ஆரோகியராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் சேவா தளம் முரளி, கோட்ட தலைவர்கள் ராஜா டேனியல் ராய், பிரியங்கா படேல், வார்டு தலைவர்கள் ஜாஹீர் உசேன், அண்ணாதுரை, ஐடி மற்றும் தகவல் பிரிவு லோகேஷ்வரன், வளன் ரோஸ், கிளமென்ட், கனகஜோதி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

 

The post மகாத்மா காந்தி நினைவு நாள் காங்கிரஸ் கட்சியினர் அஞ்சலி appeared first on Dinakaran.

Tags : Congress party ,Mahatma Gandhi ,Thillainagar ,Trichy Congress Party ,Arunachal Forum ,Mahatma Gandhi Memorial Day ,Trichy Congress Party Office ,Arunachalam Hall ,Mahatma ,Gandhi Memorial Day Congress Party ,Dinakaran ,
× RELATED மக்களவைத் தேர்தலுக்கான வாக்குறுதிகள்...