×

தோட்டக்கலைத்துறை யோசனை வலங்கைமானில் மகாத்மா காந்தி நினைவு தினம் அனுசரிப்பு

வலங்கைமான்: வலங்கைமானில் காங்கிரஸ் தொழிற்சங்கம் டி சி டி யு சார்பில் மகாத்மா காந்தியடிகளின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. மாவட்ட தலைவர் குலாம் மைதீன் தலைமை வகித்தார். டிசிடியு நகர தலைவர் அஹ்மது மைதீன், காங் செயற்குழு ராஜசேகரன் ஆகியோர் முன்னிலையில், காங் வட்டார தலைவர் சத்தியமூர்த்தி அன்னாரது உருவ படத்திற்கு மலர் மாலை அணிவித்து அனைவராலும் அஞ்சலி செலுத்தப்பட்டது. ஒற்றுமை மற்றும் மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்கப்பட்டது. வலங்கை தியாகிகளான அப்துல் சத்தார், தியாகி கரீம் ஆகியோருக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் கே.என்.ஆர். பார்த்திபன், சீனு, சிவா, மற்றும் பொதுமக்களும், மாணவர்களும் கலந்து கொண்டனர். முடிவில் மாணவர் காங்கிரஸ் தலைவர் சந்தோஷ் நன்றி கூறினார்.

The post தோட்டக்கலைத்துறை யோசனை வலங்கைமானில் மகாத்மா காந்தி நினைவு தினம் அனுசரிப்பு appeared first on Dinakaran.

Tags : Mahatma Gandhi Memorial Day ,Valangaiman ,Walangaiman ,Congress Trade Union ,TCDU ,Ghulam Maiden ,DCTU ,President ,Ahmad Mydeen ,Congress Executive Committee ,Rajasekaran ,Dinakaran ,
× RELATED வலங்கைமான் பகுதியில் வேகமாக குறைந்து...