×

இது குறித்து காரையூர் எஸ்ஐ நதியா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டையில் ஜாக்டோ, ஜியோ ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை:புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையத்தில் ஜாக்டோ ஜியோ அமைப்பு சார்பில் 01-04-2003க்குப் பிறகு அரசு பணியில் சேர்ந்தோருக்கு தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பங்களிப்புடன் கூடிய ஓய்வூதிய திட்டத்தினை கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தினை அமல்படுத்திட வேண்டும். காலவரையின்றி முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண்விடுப்பு ஒப்படைப்பு உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு ஆகியவற்றை உடனடியாக வழங்கிட வேண்டும் உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 800க்கும் மேற்பட்டோர் முழக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து அப்பகுதியில் உள்ள சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை திருமயம் செல்லும் சாலையிலும் அறந்தாங்கி ஆலங்குடி பட்டுக்கோட்டை செல்லும் சாலையிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டதை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் காவல்துறையினர் கைது செய்து அருகே உள்ள திருமண மண்டபத்திற்கு அழைத்து சென்றனர்.

The post இது குறித்து காரையூர் எஸ்ஐ நதியா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டையில் ஜாக்டோ, ஜியோ ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Karaiyur SI Nadia ,Jacto, Jio ,Pudukottai ,Pudukottai Old Bus Station ,Service ,Jacto ,Jio ,Karaiyur ,SI ,Nadia ,Dinakaran ,
× RELATED ஜாக்டோ-ஜியோ கோரிக்கை ஆசிரியர், அரசு...