×

திருவில்லிபுத்தூர் நீதிமன்றங்களில் 2023ல் விசாரணை நடைபெற்ற 97 வழக்குகளில் தண்டனை அறிவிப்பு

திருவில்லிபுத்தூர், ஜன. 31: திருவில்லிபுத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மொத்தம் 13 நீதிமன்றங்கள் உள்ளது. இதில் மாவட்ட நீதிமன்றங்களில் கடந்த ஆண்டு நடைபெற்ற குற்ற வழக்குகளில் 97 வழக்குகளில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் 4 வழக்குகளில் தண்டனை வழங்கப்பட்டது அதில் 2 வழக்குகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

குழந்தைகள் பாலியல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் 48 வழக்குகளில் தண்டனை வழங்கப்பட்டது. அதில் ஆயுள் காலம் முழுவதும் சிறையில் இருக்கும் வகையில் 9 வழக்குகளுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் 17 வழக்குகளுக்கு 20 வருட சிறை தண்டனையும் மூன்று வழக்குகளில் 10 வருட சிறை தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது. வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் 5 வழக்குகளில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது இதில் 2 வழக்குகளில் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

விரைவு மகிளா நீதிமன்றத்தில் 31 வழக்குகளில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ஆயுள் காலம் முழுவதும் சிறையில் இருக்கும் வகையில் 1 வழக்கிலும், இரட்டை ஆயுள் தண்டனை 2 வழக்குகளிலும், ஆயுள் தண்டனை 12 வழக்குகளிலும், 4 வழக்குகளில் 20 வருடமும் 5 வழக்குகளில் 10 வருடமும் தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது. கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் 9 வழக்குகளில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இதில் ஆயுள் காலம் முழுவதும் 1 வழக்கிலும், ஆயுள் தண்டனை 6 வழக்கிலும், 10 வருடம் 1 வழக்கிலும், 7 வருடம் 1 வழக்கிலும் தண்டனை வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

The post திருவில்லிபுத்தூர் நீதிமன்றங்களில் 2023ல் விசாரணை நடைபெற்ற 97 வழக்குகளில் தண்டனை அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Tiruvilliputhur ,Thiruvilliputhur ,Thiruvilliputhur Combined Court Complex ,Principal District Sessions Court ,Dinakaran ,
× RELATED வனவிலங்குகளின் உயிர்களைப் பாதுகாக்க...